இந்திய அணி வெளி கிரகத்து டீமா?.. ருதுராஜுக்கு இது நடந்தே ஆகணும் – ஹர்ஷா போக்லே கருத்து

0
206
Ruturaj

தற்போது இந்திய டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விட்டுச் சென்ற இடத்திற்கு பெரிய போட்டி இளம் வீரர்கள் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் மிகவும் பின்தங்கி இருந்த கில் தற்பொழுதும் முன்னேறியிருக்கிறார். ஆனால் முன்பிருந்து வாய்ப்பில் இருந்த ருதுராஜ் பின்தங்கி இருக்கிறார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

சுப்மன் கில் வருகைக்கு முன்பாகவே இந்திய டி20 கிரிக்கெட்டில் ருத்ராஜ் துவக்க வீரராக ரோகித் சர்மாவுக்கு பிறகு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதன் முதலில் அவருக்கு உள்நாட்டில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அங்கிருந்து கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்டாடி 20 தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான டி20 தொடர் என ருதுராஜ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். கில்லுக்கு தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இப்படியான நிலையில் திடீரென டி20 உலக கோப்பை தொடருக்கு ரிசர்வ் வீரராகவும் ருதுராஜ் தேர்வு செய்யப்படவில்லை. அதே சமயத்தில் அந்த இடத்திற்கு கில் தேர்வு செய்யப்பட்டார். இத்தோடு நடந்து முடிந்த ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கில் விளையாடும் வாய்ப்பு பெற்றதோடு கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார். அவர் 5 போட்டிகளையும் விளையாட, ருதுராஜ் சிறப்பாக விளையாடிய போதிலும் நான்கு போட்டிகள் மட்டுமே வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய டி20 அணியின் புதிய துவக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால்தான் இருப்பார்கள் என இந்திய அணி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாகப் காட்டுகிறது. மேலும் ருதுராஜ் புறக்கணிக்கப்படுகிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இதையும் படிங்க :

இதுகுறித்து பிரபல இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறும்பொழுது ” நீங்கள் இப்பொழுதுதான் வருகிறீர்கள் என்றால், ருதுராஜ் கடைசியாக விளையாடிய மூன்று நான்கு போட்டிகளை நீங்கள் பார்த்தால், ருதுராஜ் தொடர்ந்து இந்திய அணியில் இல்லை என்றால், இந்திய அணி வெளி கிரகத்தைச் சேர்ந்த அணியாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறுவீர்கள். அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -