பாண்டிங் சொன்னது பொய்யா?.. நாங்க பயிற்சியாளருக்கு எந்த ஆஸி வீரரையும் அணுகவே கிடையாது – ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு

0
51
Jay

இந்த ஆண்டு வருகின்ற ஜூன் மாதத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வருகிறது. அதே சமயத்தில் ஜெய் ஷா எந்த ஒரு ஆஸ்திரேலியா முன்னாள் வீரரையும், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அணுகவில்லை என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

நேற்று ரிக்கி பாண்டிங் இது விஷயமாக கூறும் பொழுது, ஐபிஎல் தொடரில் தான் இருந்த பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தன்னை அணுகினார்கள் என்றும், ஆனால் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்தால் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் செலவிட வேண்டும் என்பதால் தன்னால் முடியாது என்று மறுத்து விட்டதாக கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படியான நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மிக உறுதியாக எந்த ஆஸ்திரேலியா வீரரையும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அணுகவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நானோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் எந்த அதிகாரிகளோ எந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களையும் இந்திய பயிற்சியாளர் பதவிக்கான ஆஃபருடன் அணுகவில்லை. சில மீடியாக்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானவை. நம்முடைய தேசிய அணிக்கு பயிற்சியாளரை கொண்டு வருவது முற்றிலும் உன்னிப்பான ஒரு வேலை. அவருக்கு நம்முடைய அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்புகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அவர் இதில் ஆழமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் என்று வரும் பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை விட வேறு எதுவும் மதிப்பு மிக்கதாக இருக்க முடியாது. டீம் இந்தியா உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறது. இன்று லாபகரமான அமைப்பாக இந்திய கிரிக்கெட் அமைப்பு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி கிட்ட இந்த ஒரு விஷயத்தை வெச்சுக்காதிங்க.. கிடைச்சா விட மாட்டார் – கவாஸ்கர் பேச்சு

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதற்கும், திறமையான கிரிக்கெட் கூட்டமைப்பை பின் தொடர்வதற்கும் பயிற்சியாளராகஒருவர் தேவை என்பதால், அவர் மிக அதிகபட்ச உயர்திறன்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு பில்லியன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது மிகவும் கௌரவமான விஷயம். மேலும் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய சரியான பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.