நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாம் பகுதியில் ஆர் சி பி அணி விளையாடிய விதம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. ஆனால் துரதிஷ்டமாக வழக்கம் போல 17 வது முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை எலிமினேட்டர் போட்டியில் இழந்து வெளியேறினார்கள். இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு விராட் கோலியை பாராட்டி கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
விராட் கோலியை பொறுத்தவரையில் களத்தில் தன்னால் கொடுக்க முடிந்ததற்கு மீறி கொடுப்பவர். இதே போல மைதானத்திற்கு வெளியே அவர் போல பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபடக் கூடியவர்கள் கிடையாது. பெரிய வீரராக வளர்ந்த பிறகும் இதை அவர் நிறுத்துவதில்லை.
இதன் காரணமாக விராட் கோலி குறித்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவர் களத்தில் இருப்பது ஒட்டுமொத்த அணிக்கும் ஊக்கம் தரக்கூடியதாக அமைகிறது. எப்பொழுதும் வெற்றியை நோக்கி விளையாடக்கூடிய அவரது மனப்பான்மை, எந்த நேரத்திலும் ஆட்ட விழிப்புணர்வுடன் இருப்பது எல்லாம் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்துகிறது.
இந்த நிலையில் விராட் கோலி அற்புதமான த்ரோ ஒன்றின் மூலம் துருவ் ஜுரல் விக்கெட்டை வீழ்த்தினார். இது குறித்து பேசி உள்ள கவாஸ்கர் “பிளாட்டாக த்ரோ அடிப்பது மிகவும் முக்கியமானது. உங்களுக்கு இரண்டாவது ரன் ஓடுவதில் ஒரு முறை சந்தேகம் இருந்தால் ஓடாதீர்கள். உண்மையில் அங்கு இரண்டாவது ரன் இருந்ததா? மேலும் பந்து விராட் கோலியின் கைகளில் இருந்தது. வேறு எந்த ஃபீல்டர் கைகளில் இருந்தாலும் ஓடி இருக்கலாம். அவரிடம் இதை வைத்துக் கொள்ளக் கூடாது. அவர் அந்த நேரத்தில் மீண்டும் ஆர்சிபியை போட்டிக்குள் கொண்டு வந்தார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விராட் கோலி பற்றி கூறும் பொழுது “அவருடன் ஒரே ட்ரெஸ்ஸிங் ரூமில் வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் விளையாட்டு பற்றி சிந்திக்கும் விதம் அவருடைய அற்புதமான திறமை, மேலும் அவருடைய டாமினேஷன் மற்றும் விளையாட்டு மீதான பசி அபாரமாக இருக்கிறது.
இதையும் படிங்க: தினேஷ் கார்த்திக் ஒரு பெரிய குழப்பமான ஆள்.. விராட் கோலி வீடியோவில் வெளியிட்ட சுவாரசியமான தகவல்
விராட் கோலியை டி20 உலகக் கோப்பையில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்தவராக இருந்தாலும் கூட, அவர் தன்னுடைய விளையாட்டை தொடர்ந்து பயிற்சி செய்து வளர்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்






