சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுடன் விராட் கோலி 16 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்கூறி வருகிறார்கள். இந்த நிலையில் திறந்த மனதுடன் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா சிறந்த வார்த்தை விராட் கோலிக்கு கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு ரோஹித் சர்மாவுக்கு முன்பு விராட் கோலி மூன்று வடிவத்திலும் கேப்டனாக இருந்தார். 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணி இடம் தோற்ற பிறகு, அவருடைய வெள்ளைப் பந்து கேப்டன்சி அணுகுமுறை விமர்சனத்திற்கு உள்ளானது.
இதேபோல் அடுத்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்ததும், இந்திய கிரிக்கெட் மேல் வட்டாரங்களில் விராட் கோலியின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டது. இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக ஜெய் ஷா வந்திருந்தார். அப்போது கிரிக்கெட் வாரிய தலைவராக சௌரவ் கங்குலியை கொண்டு வந்தார்.
இந்த நிலையில் திடீரென விராட் கோலி எல்லாவிதமான இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார். இதற்கு பின்னணியில் ஜெய் ஷா மற்றும் சௌரவ் கங்குலி இருவரும் இருக்கிறார்கள் என பலரும் கூறியிருந்தார்கள். அந்த நேரத்தில் விராட் கோலியின் ரசிகர்கள் மிக கடுமையான விமர்சனங்களை இருவர் மீதும் முன் வைத்திருந்தார்கள்.
இந்த சூழ்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடந்த டி20 உலகக்கோப்பை வெற்றியின் போது ஜெய் ஷா மற்றும் விராட் கோலி இருவரும் நல்ல நட்பை வெளிப்படுத்திக் கொண்ட காட்சிகளை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் விராட் கோலியின் ரசிகர்களைப் போலவே அவரை கிங் என அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். அவர் இந்த அளவிற்கு பாராட்டியது தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க : 8 விக்கெட்12 ரன்.. அடுத்தடுத்து 2 சிக்ஸ்.. தமிழ்நாட்டில் கலக்கும் இஷான் கிஷான்.. இந்திய அணி வாய்ப்பு பிரகாசம்
ஜெய் ஷா விராட் கோலிக்கு அனு ப்பிய வாழ்த்து செய்தியில் “16 ஆண்டுகளுக்கு முன்பு 19 வயதான விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் இதே நாளில் காலடி எடுத்து வைத்தார். இது உண்மையில் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கையின் தொடக்கத்தை குறிக்கிறது. சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கிங் விராட் கோலிக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.