சச்சினுக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு ஒன்றை அறிவித்து ஆச்சரியப்படுத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் ; கூடவே லாராவையும் இணைத்துக் கொண்டுள்ளது!

0
2478
Sachin

நவீன கிரிக்கெட்டின் பிதாமகனான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்றைய நாளில் அவருக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன!

இப்படியான நேரத்தில் அவரை மிகவும் கௌரவிக்கும் பொருட்டாகவும், அவருக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு ஒன்றை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறது!

- Advertisement -

என்னவென்றால் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நுழைவு வாயில்களுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா இருவரது பெயரையும் சூட்டி அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. ஆஸ்திரேலியா வீரர்கள் அல்லாது வெளிநாட்டு வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவம் மற்றும் மரியாதை இதுவாகும்!

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது வலைதள குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ” உலகில் எனக்குப் பிடித்த சிறந்த கிரிக்கெட் மைதானத்தில் இது போன்ற ஒரு சிறப்பு மரியாதை, எனது நல்ல நண்பர் பிரைன் லாரா உடன் சேர்ந்து எனது பெயரையும் கொண்டிருப்பது, எங்களுக்குக் கிடைத்த சிறந்த பரிசுகளில் ஒன்றாகும். நன்றி சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகத்திற்கு!” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் சிட்னி மைதான நினைவுகள் பற்றி பேசி உள்ள சச்சின் டெண்டுல்கர்
” இந்தியாவிற்கு வெளியே எனக்கு மிகவும் பிடித்த மைதானம் சிட்னி மைதானம் ஆகும். எனது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சிட்னி மைதானத்தில் எனக்கு அழகான நினைவுகள் இருக்கின்றன. விசிட்டிங் கிரிக்கெட்டர்கள் பயன்படுத்தும் நுழைவு வாயிலுக்கு எங்களது பெயர்கள் இடப்பட்டிருப்பது ஒரு பெரிய மரியாதை. இந்த வகையான செயலுக்காக எஸ் சி ஜி க்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கூடிய விரைவில் அங்கு வரவும் எதிர்நோக்குகிறேன்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -