டி20 உலகக் கோப்பை 2024

ஆஸி வெளியிட்ட டி20 உ.கோ பிளேயிங் XI.. ரோகித் கேப்டன் கிடையாது.. 2 இந்திய முக்கிய வீரர்களுக்கு இடமில்லை

தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் இந்த டி20 உலகக்கோப்பைக்கு சிறந்த பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வெளியிட்டு இருக்கும் டி20 உலகக் கோப்பை பிளேயிங் லெவனில் மொத்தம் மூன்று இந்திய வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் இரண்டு அணிகளின் கேப்டன்களில் ஒருவரையும் இந்த பிளேயிங் லெவனில் கேப்டனாக கொண்டு வரவில்லை.

இந்த அணியின் கேப்டனாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியை சூப்பர் எட்டு சுற்றில் வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அணியின் விக்கெட் கீப்பராக கரீபியன் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் இருக்கிறார்.

மேலும் துவக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகியோர் வருகிறார்கள். அடுத்தடுத்து கரீபியன் நிக்கோலஸ் பூரன், அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங் யூனிட்டில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பவுலிங் யூனிட்டில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், பங்களாதேஷின் சுழல் பந்துவீச்சாளர் ரிஷாத் உசைன், தென் ஆப்பிரிக்காவின் அன்றிச் நோக்கியா, இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆப்கானிஸ்தானின் பஸருல்லா ஃபரூக்கி ஆகியோர் இந்த பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : தோனி மாதிரி ஹீரோவாக கோலிக்கு நல்ல வாய்ப்பு.. இந்த ஒன்ன மட்டும் செஞ்சா போதும் – முகமது கைப் பேட்டி

அதே சமயத்தில் இந்தியாவின் பேட்டிங் யூனிட்டில் நான்காவது இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அந்த இடத்தில் கனடா இன்னைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அமெரிக்கா வீரர் ஆரோன் ஜோன்ஸ் இருக்கிறார். மேலும் உலகத்தரமான குல்தீப் யாதவ் இடத்தில் ரிஷாத் உசைன் இடம்பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வெளியிட்டுள்ள இந்த பிளேயிங் லெவனை சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -
Published by
Tags: T20iwc2024