இரண்டு முறை அவுட்டில் தப்பித்த கான்வே; மூன்றாவது முறை அவுட்டே இல்லை ஆனால் வெளியேறிய வினோதம்!

0
1985
Conway

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பிளே ஆப்ஸ் வாய்ப்பில் ஒரு காலை அழுத்தமாக வைப்பதற்கான முக்கியமான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதி வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் ஆச்சரியப்படும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்தார்!

- Advertisement -

இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் இருவரும் களமிறங்கினார்கள். முதல் ஓவரை டெல்லி அணியின் கலீல் அகமது வீசினார்.

இந்த ஓவரில் கலீல் அகமது டிரைவுக்கு வீசிய ஒரு பந்தை கான்வே விளையாட அது சிறிதாக எட்ஜ் எடுத்து கீப்பர் சால்ட் இடம் கேட்ச் ஆனது. ஆனால் நடுவர் அவுட் தரவில்லை. சின்ன ஆலோசனைக்குப் பிறகு டெல்லி அணியும் அப்பீலுக்கு போகவில்லை.

இதற்கு அடுத்து லலித் யாதவ் வீசிய நான்காவது ஓவரில் கான்வே ஒரு ஸ்வீப் ஆடினார். அதற்கு டெல்லி அணி அவுட் கேட்டு நடுவர் தராததால் அப்பீலுக்கு போனார்கள். ரிப்ளைவில் பார்த்த பொழுது பெரிதான அதிர்வுகள் ஏதும் இல்லை. பந்தும் பேட் மற்றும் கிளவுஸில் பட்ட மாதிரியும் தெரியவில்லை. ஆனால் நடுவர் எட்ஜ் இருந்ததாக அவுட் தரவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து ஐந்தாவது ஓவருக்கு அக்சர் படேல் வந்தார். மீண்டும் கான்வே ஸ்வீப் ஆடப் போய் பந்தை தவறவிட்டார். டெல்லி அணி இதற்கு அவுட் கேட்க நடுவர் உடனே அவுட் கொடுத்து விட்டார். ருதுராஜிடம் கொஞ்சம் ஆலோசனை நடத்திய கான்வே அப்பீலுக்கு போகாமல் அப்படியே வெளியேறிவிட்டார்.

ஆனால் ரீப்ளேவில் பார்த்த பொழுது பந்தை அவர் ஆப்ஸ் ஸ்டெம்புக்கு வெளியே வாங்கியிருக்கிறார். ஸ்டம்ப் லைனில் விளையாடப் போய் பந்தை வாங்கினால் மட்டும்தான் அவட் தரப்படும். இல்லையென்றால் இப்படி ஸ்டெம்புக்கு வெளியில் இருக்கும் பொழுது, விளையாட முயற்சி செய்யாமல் வாங்கினால்தான் அவுட் தரப்படும்.

கான்வே விளையாட முயற்சி செய்தும், பந்து ஆப் ஸ்டெம்ப் லைனுக்கு வெளியில் இருந்தும், அப்பீலுக்கு போகாமல் விக்கட்டை கோட்டை விட்டார் கான்வே. ருத்ராஜும் சரியாகக் கவனிக்கவில்லை. முதல் இரண்டு அட்டில் தப்பித்ததற்கு கணக்கு நேராகிவிட்டது!