10 விருதுகள்.. WPL தொடரின் முழு பரிசு தொகை விபரம்.. ஆர்சிபி-க்கு எத்தனை கோடி?

0
1153
WPL

பெண்கள் டி20 லீக் டபிள்யுபிஎல் தொடரின் இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டி20 லீப் தொடர்களில் முதல் கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அனி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை பவர் பிளேவில் பெற்றது. செபாலி வர்மா 42 ரன்கள் எடுத்தார். ஆனால் அந்த அணி அதற்குப் பிறகு வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளையும் 18.3 ஓவரில் இழந்தது. மொத்தமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31, சோபி டிவைன் 32, எல்லீஸ் பெரி 34, ரிச்சா கோஸ் 13 ரன்கள் எடுக்க 19.3 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

டபிள்யூபிஎல் இரண்டாவது சீசன் முழு பரிசு தொகை விபரம்

சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 6 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இதேபோல் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மூன்று கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

341 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை வென்ற ஆர்சிபி எல்லீஸ் பெரிக்கு 5 லட்ச ரூபாய், இதேபோல் இந்தத் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆர்சிபி ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

இந்த வருட டபிள்யுபிஎல் தொடரில் மோஸ்ட் வால்யூபில் வீராங்கனை விருதை வென்ற குஜராத் ஜெயின்ட்ஸ் அணியின் தீப்தி சர்மாவுக்கு 5 லட்சம், வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை வென்ற ஆர்சிபி ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு 5 லட்சம், பவர்ஃபுல் ஸ்ட்ரைக்கர் ஆப் த சீசன் விருதை வென்ற ஜார்ஜியா வர்ஹேமுக்கு 5 லட்சம் பரிசு தொகை கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : என் தாய்மொழி கன்னடம் இல்ல.. இப்ப சொல்றேன் ஈ சாலா கப் நம்து.. கொண்டாடுங்க – ஸ்மிருதி மந்தனா பேட்டி

அதிக சிக்ஸர்கள் அடித்ததற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் செபாலி வர்மாவுக்கு 5 லட்சம், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகி விருது பெற்ற ஆர்சிபி சோபி மோலினக்ஸ்க்கு 5 லட்சம், பவர்ஃபுல் ஸ்ட்ரைக்கர் ஆப் த பைனல் விருது வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் செபாலி வர்மாவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. மொத்தம் இப்படி பத்து வகையில் பரிசு தொகைகள் இறுதிப்போட்டிக்கு பின்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.