2021 ஐபிஎல் தொடரின் முடிவில் கொடுக்கப்பட்ட விருதுகள் மற்றும் விருதுக்கான பரிசுத் தொகை விவரம்

0
536
Ruthuraj and Harshal Patel

நேற்று 14வது ஐபிஎல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நேற்றைய இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஃபேப் டு பிளேசிஸ் 59 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 86 ரன்கள் குவித்தார். 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாட தொடங்கியது.

கொல்கத்தா அணியின் ஓபனிங் வீரர்கள் கில் மற்றும் ஐயர் அற்புதமாக விளையாடி அரை சதம் குத்தாலம் அதன் பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணியால் கால்இறுதியில் 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலமாக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது ஐபிஎல் கோப்பையை வென்றது.

- Advertisement -

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான விருது மற்றும் பரிசு விவரம் :

நேற்று தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டமும் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னர் அப் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.

நேற்றைய இறுதி போட்டியில் மிக அற்புதமாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஃபேப் டு பிளேசிஸுக்கு ஆட்டநாயகன் விருதும் அது மட்டுமல்லாமல் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது

தொடர் முழுக்க அற்புதமாக விளையாடி 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை ருத்துராஜ் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் மொத்த ரன்களில், 30 சதவிகித ரன்களை ருத்துராஜ் அடித்த காரணத்தினால் அவருக்கு எமர்ஜிங் பிளேயர் விருதும் வழங்கப்பட்டது. இந்த இரண்டை விருது இருக்கும் தனித்தனியே தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பேட்டிங்கில் ருத்துராஜ் அசத்தியது போல் பவுலிங்கில் இந்த தொடர் முழுக்க அசத்தி 32 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்ஷால் பட்டெலுக்கு பர்ப்பிள் தொப்பியும், ட்ரீம் 11 கேம் சேஞ்சர் விருதும், மிக மதிப்புமிக்க வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த மூன்று விருதுக்கும் தனித்தனியே தலா 10 லட்சம் ரூபாய் அவருக்கு பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவோ சிறந்த கேட்சை பிடித்த விருது ரவி பிஷ்னோய்க்கும், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது சிம்ரோன் ஹெட்மையருக்கும், லெட்ஸ் கிராக் இட் சிக்சஸ் விருது கே எல் ராகுலுக்கும், கிரெட் பவர் பிளேயர் விருது வெங்கடேஷ் ஐயருக்கும் வழங்கப்பட்டது. இந்த அனைத்து விருது இருக்கும் தனித்தனியே 10 லட்ச ரூபாய் இவர்களுக்கு பரிசு தொகையாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.