ஆஸ்திரேலிய நாட்டின் தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆக இது நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொடர் சரியான நேரத்தில் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக கருதப்படும் பிரிஸ்பன் மைதானத்தில் இங்கிலாந்து அணியினர் ஆஸ்திரேலிய அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகவும் எளிதாக முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.
தற்போது 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்காததால் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா அணி களம் கண்டுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் என்றாலே சிறப்பாக செயல்படும் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் இதுவரை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் மோதும் ஆஷஸ் போட்டியின் போது சில மணித்துளிகள் வர்ணனையாளர்கள் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி குறித்து பேசினர். வர்ணனையில் அவர்கள் பேசும்போது எங்களுக்கு விராட் கோலியை மிகவும் பிடிக்கும் என்றும் இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பேட்டிங் வீரர் விராட் தான் என்றும் புகழ்ந்துள்ளனர். மேலும் உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி தான் என்றும் அவர்கள் கோலியை புகழ்ந்தனர்.
கேப்டன் பதவி பறிப்பு, பிசிசிஐ இடமிருந்து சரியான தகவல் பரிமாற்றம் இல்லை போன்ற சச்சரவுகளில் கோலியின் பெயர் தற்போது இடம்பெற்று வந்தாலும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் அவரது பெயரை வர்ணனையாளர்கள் வெகுவாக புகழ்ந்து கோழியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கொடிகட்டிப் பறக்கும் விராட் கோலியின் புகழ் – ஆஷஸ் டெஸ்ட்க்கு இடையே வர்ணனையாளர்கள் புகழாரம்
- Advertisement -