சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.
இது 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வரலாற்றில் மிக மோசமான தோல்வியாக அமைந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியை பொறுத்த வரை கேப்டன் ராஜத் பட்டிதார் 32 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 51 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். சென்னை அணியை பொறுத்தவரை சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததால் சென்னை அணியால் அதற்கு மேல் தலை நிமிர முடியவில்லை. மேலும் தொடக்கம் முதல் இறுதி வரை எந்த பேட்ஸ்மேனும் ஒரு அதிரடியான அணுகு முறையில் விளையாடவில்லை என்பது மறக்க முடியாத உண்மையாகும். மகேந்திர சிங் தோனியும் முன்னரே களம் இறங்கி விளையாடாமல் ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்தது ரன் ரேட்டை குறைப்பதற்கு மட்டுமே பயன்பட்டது தவிர வெற்றிக்காக பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி இடம் தோல்வியை தழுவியது. இது 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வரலாற்றுத் தோல்வியாக அமைந்தது. இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019ம் ஆண்டு 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. அதுவே அதிகபட்ச ரன்னாக இருந்த நிலையில் தற்போது அதை முறியடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ருதுராஜ் பிளமிங் செஞ்ச பெரிய தப்பு.. சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணம் – ரசிகர்கள் விளாசல்
மேலும் சென்னை அணி மூன்றாவதாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய போட்டியாக இது அமைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய சென்னை அதற்கு அடுத்ததாக 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு பார்போனில் தோல்வியை தழுவியது. இதற்கு அடுத்ததாக கட்டாக்கில் 2014 ஆம் ஆண்டு 44 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும், 2020 ஆம் ஆண்டு துபாயில் இதை 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணிக்கு எதிராகவும் தோல்வியை தழுவிய குறிப்பிடத்தக்கது.






