ஒரு ஓவரில் 6 சிக்ஸ்.. கம்பீர் கோச் வளர்த்திய வீரர்.. ரிக்கி பாண்டிங் வைத்த குறி.. பயிற்சியாளர் பேட்டி

0
606
Arya

நேற்று நடந்த முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3.80 கோடி ரூபாய்க்கு வாங்கிய பிரியன்ஸ் ஆர்யாவின் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் அவர் குறித்து பேசி இருக்கிறார்.

சஞ்சய் பரத்வாஜ் டெல்லி கிரிக்கெட்டில் கவுதம் கம்பீர், நிதிஷ் ராணா பலருக்கும் பயிற்சியாளராக இருந்து பொறுப்பில் புகழ்பெற்றவர். இவரே பிரியன்ஸ் ஆர்யாவுக்கும் பயிற்சியாளராக இருந்து வந்தார். இவரது பயிற்சியின் கீழ் இருந்து வந்த இளம் வீரர் தற்பொழுது 3.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள்

இந்த ஆண்டு தொடங்கப்பட்ட டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடரில் பிரியன்ஸ் ஆர்யா அதிரடியாக விளையாடி ஒரு சதம் அடித்திருந்தார். மேலும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களும் விளாசி இருந்தார். மேலும் டெல்லி பிரிமியர் லீக்கில் விளையாடிய மொத்த விதமும் அனைவரது கவனத்தையும் திருப்புவதாகவே இருந்தது.

இடதுகை பேட்ஸ்மேனான அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க இடத்திற்கு தற்பொழுது வாங்கி இருக்கிறது. எடுத்ததும் விளையாட வாய்ப்பு கொடுப்பார்களா? இல்லை பேக்கப் ஓபனரா வைத்துக் கொள்வார்களா? என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் ரிக்கி பாண்டிங் இந்த வீரரை தனிப்பட்ட முறையில் கவனித்து வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

30 கோடி ரூபாய்க்கு விளையாட வேண்டும்

இந்த நிலையில் பிரியன்ஸ் ஆர்யா பற்றி சஞ்சய் பரத்வாஜ் கூறும்பொழுது “நான் பிரியன்ஸ் ஆர்யா அப்பாவிடம் உங்கள் மகன் குறைந்தது 2.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்படுவார் என்று கூறி இருந்தேன். அவருக்கு இயற்கையான திறமை இருக்கிறது. நாம் காப்பி புக்கை பயிற்சி அளிக்க கூடாது. அவருக்கு இருக்கும் இயல்பான திறமையை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சனையாகிவிடும். நான் அவருடைய இயற்கையான திறமையை ஆதரித்தேன்”

இதையும் படிங்க : இந்தியா பக்கத்தில் கூட ஆஸி கிரிக்கெட் வர முடியாது.. டிராவிட்ட வச்சி பெரிய வேலை நடந்தது – கிரேக் சேப்பல் பேட்டி

“அவர் டெல்லி பிரிமியர் லீக்கில் விளையாடினார். இப்பொழுது ஐபிஎல் தொடருக்கு சென்றிருக்கிறார். தரம் அதிகரிக்கும் பொழுது பொறுப்பும் கூடுகிறது. எனவே இப்பொழுது அவர் ரிலாக்ஸ் செய்ய முடியாது. அவர் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவர் 30 கோடி ரூபாய்க்கான பலனை கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -