இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் மிகச்சிறந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை உருவாக்குவதே தன்னுடைய இலக்கு என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பின்தங்கிய அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருந்து வருகிறது. இதுவரை 17 ஐபிஎல் சீசன்களில் அந்த அணி இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றை தொட்டு இருக்கிறது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. வீரர்களை நிரந்தரமாக தக்க வைக்காமல், கேப்டனை நிரந்தரமாக வைக்காமல் அந்த அணி பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது.
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “இந்த அணியின் ஒட்டுமொத்த பார்வை ஐபிஎல் தொடரை வெல்வதுதான். நான் தரம்சாலாவில் பயிற்சி முகாமில் முதல் நாளிலேயே வீரர்களிடம் சொன்னேன், இதுவரை விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் சிறந்த அணியை நாம் உருவாக்க போகிறோம் என்று. இது ஒரே இரவில் நடந்து விடாது, நாம் இதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும்”
“வெற்றி என்பது ஒரு மனோபாவம். நாம் வெற்றி பெற திரும்புவது போல எதிர் அணியும் நம்மிடம் திரும்புவார்கள். அவர்கள் வெற்றி பெற்று செல்வது நம்மிடமிருந்து எதையோ பறித்து செல்வது போல. நான் என் அணியிடமிருந்து யாரும் எதையும் பறித்துச் செல்வதை விரும்புவதில்லை. நாங்கள் வெற்றி பெறுவதை நோக்கமாக வைத்திருக்கிறோம்”
“பிரியன்ஷ் ஆர்யா தொடரில் தொடர்ந்து முன்னேறி செல்வதற்கு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று நான் நினைக்கிறேன். எப்படியான வெளிநாட்டு வீரர்களை எடுத்துச் செல்கிறோம் என்பதில் இருந்து இது அமையும். மேலும் எங்களிடம் இந்திய வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சூரியன்ஷ் ஷெட்கே பயிற்சியின் போது மிகவும் ஈர்க்கக் கூடிய உற்சாகமான வீரராக இருந்தார்”
இதையும் படிங்க : இப்ப ஸ்பின்னர்களுக்கு தைரியமே இல்ல.. என்னை மன்னிச்சிடுங்க ஆனா ஒழுங்கா இதை செய்ங்க – ஹர்பஜன் சிங் அறிவுரை
“நான் இந்திய உள்நாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய விஷயங்களை வைத்தேன். குறிப்பாக இந்திய இளம் வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை எதிர்பார்க்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், இவர்களும் சிறப்பாக செயல்படாமல் இருப்பது எளிதாகி விடுகிறது. எனவே நான் வெளிநாட்டு வீரர்களை இவர்களுக்கு முன் உதாரணமாக சிறப்பாக செயல்பட வைக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.