இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் 2025.. சாம்சன் சொல்லியே தக்க வைத்தோம் நீக்கினோம்.. அஸ்வின் ஜெய்ஸ்வால் முடிவு – ராகுல் டிராவிட் பேட்டி

2025 ஆம் ஆண்டுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வீரர்களை தக்க வைத்ததில் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பெரிய பங்கு இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கரா பயிற்சியாளராக இருந்தார். இந்த நிலையில் அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு அந்த அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தக்கவைப்பு

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் தலா 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் தலா 14 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட இருக்கிறார்கள். இதற்கு அடுத்த சிம்ரன் ஹெட்மயர் 11 கோடி ரூபாய்க்கும், அன்கேப்டு பிளேயராக 4 கோடி ரூபாய்க்கு சந்தீப் சர்மாவும் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின், சாகல் மற்றும் ட்ரண்ட் போல்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த முறை வீரர்களை தக்க வைத்ததில் கேப்டன் சஞ்சு சாம்சன் பெரிய பங்கை கொண்டிருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மனம் திறந்து வெளிப்படையாக நடந்துவற்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பெரிய உறவை சாம்சன் வளர்த்திருந்தார்

இது குறித்து ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இந்த தக்க வைப்புகளில் சாம்சனுக்கு ஒரு பெரிய பங்கு இருந்தது. அவருக்கும் நிறைய சிரமங்கள் இருந்தது. ஒரு கேப்டனாக வீரர்களுடன் அவர் நிறைய உறவை வளர்த்தி இருந்தார். எங்களால் தக்க வைக்க முடியாத வீரர்களுக்காக நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். சாம்சன் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் இந்த வீரர்களுடன் இணைந்து விளையாடி வந்திருக்கிறார்”

இதையும் படிங்க : ஆஸி ஏ டெஸ்ட்.. 208 ரன்.. சாய் சுதர்சன் படிக்கல் அசத்தல்.. ருதுராஜ் ஏமாற்றம்.. இந்திய அணி கம் பேக்

“அவர் இந்த தக்க வைப்புகளில் சமநிலையான கருத்துகளை கொண்டிருந்தார். அவருக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது. அவர் இதில் இருக்கும் நன்மை தீமை குறித்து எங்களிடம் நிறைய விவாதம் செய்தார். எடுப்பதற்கு எளிதான முடிவில்லாத பொழுதும் நாங்கள் இதை எடுத்தோம். நிறைய விவாதங்கள் சென்ற பொழுதும் தற்போது தக்கவைத்த வீரர்களில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பலரை மீண்டும் தக்க வைக்க முயற்சி செய்வோம்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts