அடுத்த போட்டி அகமதாபாத் ஆடுகளம் பற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து!

0
197
Rahul Dravid

இந்தியாவில் தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடுகளம் குறித்து மிக அதிகம் பேசப்பட்டு வருகிறது!

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நாக்பூர் மற்றும் டெல்லி ஆடுகளங்களுக்கு ஐசிசி ஆவரேஜ் ஆடுகளம் என்று சர்டிபிகேட் கொடுத்து இருந்தது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா தரப்பில் இந்த இரண்டு ஆடுகளங்களும் விளையாட கடினமானது இல்லை என்று ஒப்புதல் சொல்லப்பட்டிருந்தது!

- Advertisement -

மூன்றாவது போட்டி நடந்த இந்தூர் ஆடுகளம் அமைதியாக இருந்த சர்ச்சைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து விட்டது. முதல் நாள் முதல் செஷன் போதே பந்து தாறுமாறாக திரும்ப, இந்திய அணி நிர்வாகம் விரித்த வலையில் இந்திய அணியே விழுந்து மாட்டிக்கொண்டது. இந்த நிலையில் இந்த ஆடுகளத்திற்கு ஐசிசி மோசம் என்று சர்டிபிகேட் கொடுத்தது.

தற்பொழுது அகமதாபாத் ஆடுகளம் குறித்து ராகுல் டிராவிட் இடம் கேட்கப்பட்ட பொழுது ” இந்த ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது. நிறைய பேச்சுக்கள் ஆடுகளத்தை சுற்றியே இருக்கின்றன. நாம் ஆடுகளத்தை படித்து அதற்கேற்றவாறு விளையாட கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் அவரிடம் ஐசிசி இந்தூர் ஆடுகளத்துக்கு மோசம் என்று சர்டிபிகேட் தந்திருப்பது குறித்து கேட்கப்பட்ட பொழுது “இதற்குள் நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. இது மேட்ச் ரெப்ரி முடிவு சம்பந்தப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற தேவையான புள்ளிகள் ஆபத்தில் இருப்பதால், முடிவுகளைப் பெற்றே ஆக வேண்டிய அவசியத்தில் நாம் இப்படியான ஆடுகளங்களில் விளையாட வேண்டி இருக்கிறது!” என்று அவர் கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் இந்தூர் ஆடுகளம் குறித்தான புகார்களுக்கு பதில் அளித்துள்ள மத்திய பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன்
” இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. எல்லா மைதான ஆடுகள அமைப்பிலும் பிசிசிஐ வழிகாட்டுதல் படியே நடக்கிறது. போட்டி துவங்குவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பு பிசிசிஐ பிட்ச் க்யூரேட்டர்கள் இருவர் வந்தார்கள். அவர்களின் மேற்பார்வையில்தான் ஆடுகளம் அமைக்கப்பட்டது. இதில் எங்களின் பங்கு என்று எதுவும் கிடையாது!” என்று அவர் கூறியுள்ளார்!

ஆஸ்திரேலியா லெஜன்ட் இயான் சேப்பல் இது குறித்து கூறும் பொழுது, இந்திய அணி நிர்வாகம் ஆடுகளம் அமைப்பதில் தலையிடுவது மோசமான ஒன்று. மேலும் ஆடுகளம் தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரும் தலையிடுவது சரியானது அல்ல. ஆஸ்திரேலியாவுக்கு வந்து ஐந்து நாட்கள் விளையாடி தொடரை வென்றது மறந்து விட்டதா? என்று கடுமையாக சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!