முடிவு பண்ணிட்டேன்.. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னால நாங்க அத செய்யணும் – ஆப்கான் கோச் ஜோனதன் டிராட் பேச்சு

0
261
Trott

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரஷித் கான் தலைமையிலான அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் முதல் சுற்றின் கடைசிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் அடுத்து இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் முன்பாக ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் பிரச்சனைகள் குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணி முதல் சுற்றில் உகாண்டா நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளை 100 ரன்களுக்குள் சுருட்டி மூன்று பிரமாண்ட வெற்றி பெற்றது. இதன் காரணமாக சி பிரிவில் இருந்து வெஸ்ட் இண்டிஸ் அணிவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று முதல் சுற்றில் தனது கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோதியது. முதலில் பந்து வீசி 218 ரன்கள் விட்டுத் தந்தது. அசாமத்துல்லா ஓமர் சாய்வீசிய பவர் பிளே ஓவர் ஒன்றில் 36 ரன்களை நிக்கோலஸ் பூரன் அடித்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டு 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வியாழக்கிழமை விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் பேசும் பொழுது உண்மைதான் நாங்கள் வேலை செய்ய வேண்டிய பகுதிகள் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரை நன்றாக வீசாவிட்டால், அடுத்த ஓவரில் வந்து அதை சரி செய்ய முயற்சிக்கலாம். ஆனால் இன்று எங்களுக்கு இரண்டு ஓவர்கள் சரியாக அமையவில்லை. அந்த இரண்டு ஓவர்களில் ஒட்டுமொத்தமாக 60 ரன்கள் சென்றுவிட்டது.

இதையும் படிங்க : வில்லியம்சன் விராட் கோலிய பார்த்து.. இத 15% அதிகமாக்கணும்.. இல்லனா கஷ்டம் – மைக்கேல் வாகன் கருத்து

இது போட்டியின் மீதி 18 ஓவரின் மீதும் அழுத்தத்தைக் கொடுக்கும். இதுதான் உண்மை என்றாலும் கூட இதுதான் கிரிக்கெட்டின் கருப்பு வெள்ளை பக்கங்கள். ஆமாம் நான் உண்மையில் எங்களுடைய பேட்டிங்கில் ஏமாற்றம் அடைந்தேன். நாங்கள் இன்னும் கொஞ்சம் இலக்கை நெருங்கி இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -