இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைவதில் உலகச் சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் தங்களுடைய தோல்விக்கு ஆடுகளம் காரணம் இல்லை என பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய பாகிஸ்தான் அணி 556 ரன்கள் எடுத்தது. ஆனால் இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான அணியை இரண்டாவது இன்னிங்ஸிலும் சுருட்டி வென்றுவிட்டது. முதலில் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து தோல்வி அடைந்த ஒரே அணியாக பாகிஸ்தான் அணி மோசமான சாதனை படைத்திருக்கிறது.
ஆடுகளம் பற்றிய சர்ச்சை
இந்த போட்டிக்கு அமைக்கப்பட்டிருந்த ஆடுகளம் குறித்து எடுத்ததுமே இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ஆன மைக்கேல் வாகன் மற்றும் கெவின் பீட்டர்சன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். அவர்கள் இந்த ஆடுகளத்தை தார் ரோடு எனவும் பவுலர்களின் கல்லறை எனவும் விமர்சனம் செய்திருந்தார்கள்.
அவர்களின் விமர்சனப்படியே பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் மிகவும் சாதகமாக இருந்தது. பாகிஸ்தான் சார்பில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டன. இதற்கடுத்து இங்கிலாந்து சார்பில் ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு முச்சதம் அடிக்கப்பட்டது. 1500 ரன்கள் தாண்டி மூன்று இன்னிங்ஸ்களில் எடுக்கப்பட்டன.
மாற்றம் மாற்றம் என்று கூக்குரல் இடுகிறார்கள்
இது குறித்து பாகிஸ்தான் டெஸ்ட் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி “என்னையும் உள்ளடக்கிய இந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணி நிர்வாகம் வெறும் மூன்றாவது போட்டி தான் விளையாடுகிறது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் கடந்த கால நிகழ்ச்சிகளை பார்த்து விட்டோம் தற்பொழுது எங்களுடைய செயல் திறனில் கவனம் செலுத்தி வருகிறோம்”
“எல்லோரும் மாற்றம் மாற்றம் என்று கூக்குரல் இடுகிறார்கள். மக்கள் நல்ல முடிவுகளை பார்க்க விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்கிறேன். இந்த ஆடுகளம் குறித்து நான் அதிருப்தி அடையவில்லை. நாங்கள் விளையாடுவதற்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தோம். எங்கள் முதல் இன்னிங்ஸில் நாங்கள் 550 ரன்கள் எடுத்தோம். அந்த பகுதி நன்றாக இருந்தது”
இதையும் படிங்க : யார் இயல்பான திறமை?.. ரிக்கி பாண்டிங் பேச்சுக்கு.. மஞ்ச்ரேக்கர் மறைமுக பதிலடி.. தோனிக்கு பாராட்டு
“நாங்கள் ஆரம்பத்தில் ரன்கள் குவித்த பொழுது இந்த ஆடுகளம் பற்றி இங்கிருந்து யாரும் எதுவும் வாய் திறந்து பேசவில்லை. நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தாத பொழுதும், பந்து வீச்சில் நாங்கள் சரியாக செயல்படாத பொழுதும்தான் விமர்சனம் வருகிறது. இதனால்தான் உடனே ஆடுகளம் பற்றி பேசுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்






