யார் இயல்பான திறமை?.. ரிக்கி பாண்டிங் பேச்சுக்கு.. மஞ்ச்ரேக்கர் மறைமுக பதிலடி.. தோனிக்கு பாராட்டு

0
382
Ponting

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய கிரிக்கெட்டை மாற்றி அமைத்த வீரர் யார்? என்பது குறித்தும், கிரிக்கெட் உலகில் இயல்பான திறமை கொண்ட வீரர் யார்? என்பது குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றியை பேட்டிங்தான் தீர்மானிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் தெரிவித்த கருத்து

ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் உலகில் ஒட்டுமொத்தமாக வீரராக சிறந்தவர் என்றால் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் என கருத்து தெரிவித்திருந்தார். அவர் டெஸ்ட எடுத்திருக்கும் ரன்கள் மற்றும் சதங்கள், மேலும் விக்கெட்டுகள் இன்னொரு வீரர் வந்து செய்ய முடியாதது என்று கூறியிருந்தார்.

மேலும் இயல்பாகவே பேட்டிங் திறமை கொண்ட வீரராக அவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாராவை தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் 16 வயதிலேயே கிரிக்கெட்டுக்கு வந்து அடுத்த சில வருடங்களிலேயே சதங்கள் எடுத்த ஆரம்பித்து விட்ட சச்சின் டெண்டுல்கரை இயல்பான திறமை கொண்ட பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சச்சின் அருகில் யாருமில்லை

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும்பொழுது “இந்திய கிரிக்கெட் விளையாடும் முறையை தோனி மாற்றினார் மேலும் அதை எளிதாக்கினார். அணி வெற்றி பெற வேண்டும் என்பதில் அவர் எப்பொழுதும் ஆர்வமாக இருந்தார். மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி இலக்குகளை மிக வெற்றிகரமாக துரத்த ஆரம்பித்தது”

“வெறும் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் வந்து பழகுவதற்கு வெறும் இரண்டு மாதங்களில் எடுத்துக் கொண்ட சச்சின் நம்ப முடியாத அளவுக்கு இயல்பான கிரிக்கெட் திறமை கொண்டவர். அங்கிருந்து ஓரிரு வருடங்களில் ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டார். இப்படியான அவரின் சுத்தமான திறமைக்கு அருகில் யாருமே கிடையாது”

இதையும் படிங்க : இந்தியா ஆஸி டெஸ்ட் தொடர்.. பும்ரா கூட சிராஜுக்கு பதிலா இவர்தான் விளையாடனும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

“இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் மிகவும் போட்டி கொண்டதாக இருக்கும். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் எப்படி அமைகிறது என்பதை பொறுத்துதான் இந்த தொடரின் வெற்றி தோல்வி அமையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -