இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக தற்பொழுது சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் அவர் முழு நேர கேப்டனாக புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் கவுதம் கம்பீர் உடன் இணைகிறார். இருவருக்கும் ஏற்கனவே இருக்கும் நட்பு குறித்து பேசி இருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் கேப்டனாக இருந்தார்.
இந்த இரண்டு தொடர்களிலும் கேப்டன் பொறுப்பு அவருடைய பேட்டிங்கை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சிறப்பாக விளையாடி சதமும் அடித்திருந்தார். மேலும் அவர் வீரர்களை மிகவும் நட்பான முறையில் களத்திலும் களத்திற்கு வெளியிலும் வழி நடத்தினார். அவருடைய கேப்டன்சி அணுகுமுறை ரோகித் சர்மா போலவே இருந்தது. இதுவெல்லாம் சேர்ந்து ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூரியகுமார் யாதவை புதிய டி20 கேப்டன் ஆக கொண்டு வந்திருக்கிறது.
தற்போது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உடன் தனது உறவு பற்றி பேசிய சூர்யா குமார் யாதவ் “இந்த விளையாட்டில் நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் சாதித்தாலும் அல்லது எதுவும் செய்யவில்லை என்றாலும் அடக்கமாக இருக்க வேண்டும். நீங்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது இது உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே இது வாழ்க்கை கிடையாது. இதுதான் எனக்கு மனநிலையில் சமநிலையை உருவாக்க உதவுகிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தால் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்.
நான் கேப்டனாக இல்லாத போதும் கூட களத்தில் ஒரு கேப்டன் போல செயல்படுவதை விரும்பினேன். இதன் காரணமாக நான் நிறைய கேப்டன்கள் இடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். தலைமை பாத்திரம் ஒரு நல்ல உணர்வு மற்றும் பெரிய பொறுப்பு.
இதையும் படிங்க: கம்பீர் ஸார் பயிற்சியில இந்த 2 விஷயத்துல கில்லாடி.. நீங்க அத கிரவுண்ட்ல பார்ப்பிங்க – சுப்மன் கில் பேட்டி
கம்பீர் அவர்களுடன் எனக்கு 10 ஆண்டு காலம் உறவு இருக்கிறது. அவர் கேப்டனாக இருந்த பொழுது நான் கொல்கத்தா அணிக்காக விளையாடினேன். அவர் அப்பொழுது என்னிடம் நீங்கள் மூன்று அடி எடுத்து வைத்தீர்கள் இரண்டு அடி உங்களுக்கு கிடைத்தது என்று கூறுவார். இதனால்எங்கள் உறவு வலுவாகவே இருக்கிறது. மேலும் நான் பயிற்சி செய்யும் முறை மற்றும் என்னுடைய மனநிலை அவருக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எங்களுக்குள் இருக்கும் உறவு இன்னும் எவ்வளவு வலுப்படுத்துகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.






