இதே ஆளுங்கதான் போன வருஷம் என் கதை முடிஞ்சுதுனு சொன்னாங்க.. என் பாணி இதுதான் – பும்ரா சிறப்பு பேட்டி

0
208
Bumrah

இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசாத்தியமான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவின் பங்கு மிகப் பெரியது. நேற்று ஆட்டநாயகன் விருது வென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்து சிறப்பு பேட்டி அளித்தார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் 10 ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி, கடைசி 9 ஓவர்களில் மிக மோசமாக விளையாடி, 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை தாக்குதல் பாணியில் இருந்ததால் விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் 120 ரன்கள் என்கின்ற குறைந்த இலக்கை நோக்கி மிக சிறப்பான முறையில் நகர்ந்தார்கள். அவர்களுக்கு கடைசி ஆறு ஓவரில் ஏழு விக்கெட் கைவசம் இருக்க வெறும் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த இடத்தில் பும்ரா 15ஆவது ஓவரில் முகமது ரிஸ்வான் விக்கெட்டை கைப்பற்றி, ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார்.

அங்கிருந்து இந்திய பந்துவீச்சாளர்கள் ஜடேஜா தவிர அனைவருமே ஆளுக்கு ஒரு ஓவர் வீசி, அந்தந்த ஓவர்களில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்கள். இறுதியில் இந்திய அணி அசாத்தியமான முறையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய பும்ரா கூறும் பொழுது “இதே மக்கள்தான் ஒரு வருடத்திற்கு முன்பாக நான் திரும்பவும் வந்து விளையாட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்னோட கேரியர் முடிஞ்சு போச்சுன்னு சொன்னாங்க. ஆனா இப்ப பேச்சே மாறிடுச்சு. ஆனால் நான் எதையும் பார்க்கவில்லை என் திறமைக்கு ஏற்றார் போல பந்து வீசுகிறேன். எனக்கு முன்னாள் இருக்கும் விஷயத்தை கட்டுப்படுத்தவும் சிக்கலை தீர்க்கவும் பார்க்கிறேன்.

இதையும் படிங்க : 13 ஓவரில் 153 ரன்.. இங்கிலாந்தை மிரள விடும் ஸ்காட்லாந்து.. ஓமான் பரிதாபமாக வெளியேறியது

இதுபோன்ற ஒரு விக்கெட்டில் எது நல்ல பந்தாக இருக்கும்? என்று சிந்தித்தேன். அவர்களுக்கு எந்த மாதிரியான ஷாட் கடினமாக இருக்கும்? என்று சிந்தித்தேன். நான் நிகழ்காலத்தில் இருந்து எதையும் செய்ய விரும்புகிறேன். நான் வெளியில் இருந்து வரும் சத்தத்தை மக்களை பார்த்தால் என்னால் செயல்பட முடியாது. உணர்ச்சி வசப்படுவது எனக்கு சரி வராது. எனவே என்னை நான் சரியான இடத்தில் வைத்துக் கொள்கிறேன். மேலும் என்னுடைய சிறந்த அடியை எடுத்து வைக்க முயற்சி செய்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -