நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க அணிக்கு எதிராக மிகவும் தடுமாறி இறுதியில் வெற்றி பெற்றது. இதுகுறித்து அணியின் கூட்டத்தில் கம்பீர் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
தற்போது இந்திய டி20 அணி மிகவும் வலிமை வாய்ந்ததாகவும் அதிரடியாகவும் காணப்படுகிறது. மேலும் நடந்து கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் முதல் அணியாக 300 ரன்னை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்திய அணி அமெரிக்க அணிக்கு எதிராக 77 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்திய அணி முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடும் அணுகு முறையை வைத்திருக்கிறது. அமெரிக்க அணிக்கு எதிராக ஏற்பட்ட அனுபவத்தால் இந்த அணுகு முறையில் எந்தவித மாற்றமும் வராது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து இதே அணுகுமுறையில் விளையாடும் என்று தெரிகிறது.
அதே சமயத்தில் முதல் நான்கு விக்கெட்டுகள் மிக வேகமாக சரியும் பொழுது அடுத்து வரக்கூடியவர்கள் கொஞ்சம் பொறுமையாக விளையாட வேண்டும் என முகமது கைப் இர்பான் பதான் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் கம்பீர் தொடர்ந்து அதிரடியாக விளையாடுவதில் உறுதியாக இருக்கிறார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் அணிக் கூட்டத்தில் பேசும் பொழுது ” நமக்கு டி20 உலக கோப்பையின் தொடக்கத்திலேயே ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது. சூரிய குமாரின் ஆட்டம் மிகவும் திறமையாகவும் அதே சமயத்தில் புத்திசாலித்தனமாகவும் இருந்தது. இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த டி20 ஆட்டமாக இருக்கும்” என்று பாராட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க : என் இதயத்தை நேபாள் வேகமாக துடிக்க வைத்து விட்டது.. எங்ககிட்ட ரொம்ப அருமையா பண்ணிட்டாங்க – வில் ஜேக்ஸ் பேட்டி
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “போட்டி நடந்து முடிந்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் ஆட்டத்தில் கொஞ்சம் பயமாகவும் தடுமாற்றமாகவும் இருந்தது. ஆனால் இது எனக்கும், வீரர்களுக்கும், அணி ஊழியர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு போட்டியாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.