இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற புதன்கிழமை முதல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் இந்த டி20 தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதற்குப் பிறகு மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் வருகிற புதன்கிழமை முதல் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் ஒரு முன்னணி அணியுடன் ஆன இந்த மோதல் இந்திய அணிக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் இந்தத் தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” கடந்த முறையை விட நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்திய அணி வெவ்வேறு வடிவங்களில் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ளது. ஆனால் நான் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 தொடருக்கு விளையாட செல்லவில்லை. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே போன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாடுகிறோம். அங்கு பல மைதானங்கள் இருக்கிறது, நாங்கள் தொடர்ந்து விளையாடுகிறோம். இது போன்ற வித்தியாசமான ஆடுகளத்தை தயாரிப்புகள் என்று எதுவும் கிடையாது.
இதையும் படிங்க:தம்பி ஹர்ஷித் உன்ன நான் ரொம்ப விமர்சனம் பண்ணிட்டேன்.. ஆனா நீ அந்த தப்ப செய்யல – ஸ்ரீகாந்த் பாராட்டு
நான் எந்த ஒரு நாட்டிற்கும் தலைவராக செல்வேன் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும், சிறப்பாக செயல்பட வேண்டும், சாம்பியன்ஷிப்களை வெல்ல வேண்டும் என்று மட்டுமே நினைத்தது உண்டு. இதுதான் எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஒரு புதிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியா என்பது எப்போதும் ஒரு புதிய சவால். நாங்கள் 2022 ஆம் ஆண்டு சென்று விளையாடியுள்ளோம். எனவே இந்த முறை ஒரு புதிய சவாலாகவும் வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.






