தங்களது அதிரடியான பேட்டிங் அணுகுமுறையால் 100 ரன்னில் கூட தாங்கள் ஆல் அவுட் ஆகக் கூடும் என்றும் ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தான் செய்ய மாட்டேன் எனவும் பயிற்சியாளர் கம்பீர் கூறியிருக்கிறார்.
இந்திய அணி நாளை மறுநாள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்தித்து விளையாடுகிறது. இதற்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கலந்து கொண்டார்.
இந்திய அணியின் அதிரடி பேட்டிங் அணுகுமுறை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிகள் சஞ்சு சாம்சன் அதிரடி சதத்தில் மற்றும் சூரியகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தில் இந்திய அணி 297 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. மேலும் பந்துவீச்சில் சிறிய டார்கெட்டை மனதில் வைத்து அதற்கேற்றபடி செயல்பட்டு பங்களாதேஷ் அணியை மடக்கி பெரிய வெற்றி பெற்றது.
இதற்கு முன்பாக இரண்டு நாட்கள் மட்டுமே மழையின் காரணமாக விளையாட முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி அதிரடியான பேட்டிங் முறையில் வெற்றி பெற்றது. இப்படி எதிரெதிரான இரண்டு கிரிக்கெட் வடிவத்திலும் ஒரே மாதிரியான அதிரடி பேட்டிங் அணுகுமுறையை இந்திய அணி கொண்டு இருக்கிறது.
நாங்கள் 100 ரன்னில் ஆல் அவுட் ஆகலாம்
இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளில் 400 ரன்கள் எடுக்கக்கூடிய அணியாக இருக்க விரும்புகிறோம். அதே சமயத்தில் தேவைப்படும் பொழுது இரண்டு நாட்கள் நின்று பேட்டிங் செய்யும் அணியாகவும் இருக்க நினைக்கிறோம். இதுதான் நாங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தகவமையையும் திறன் ஆகும்.எங்களிடம் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு வெற்றி மட்டுமே முதல் விருப்பமாக இருக்கும். மேலும் அது மட்டுமே இரண்டாவது மூன்றாவது விருப்பமாகவும் இருக்கும்”
இதையும் படிங்க : பேட்ஸ்மேன் 1000 ரன்கள் அடிச்சாலும் யூஸ் இல்லை.. இனி பவுலர்களை கொண்டாடுங்க – கம்பீர் வெளிப்படையான பேச்சு
“பேட்ஸ்மேன்கள் அவர்களுடைய இயல்பான முறையில் அதிரடியாக விளையாடுவதை நான் தடுத்து நிறுத்த மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளில் 450 முதல் 500 ரன்கள் எடுக்கும் வீரர்களை நான் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்? மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிக ரிஸ்க் அதனால் ரிவார்டு என்கின்ற பாலிசி என்னுடையது. இதனால் நாங்கள் 100 ரன்னில் கூட ஆல் அவுட் செய்யப்படலாம். ஆனாலும் நாங்கள் இந்த அதிரடியான அணுகுமுறையை டி20 கிரிக்கெட்டில் மட்டும் மாற்றிக்கொள்ளவே மாட்டோம்” என்று கூறி இருக்கிறார்.






