நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா அதிரடி பேட்டிங்கில் ஆஸ்திரேலியா அணி வெளியேற்றப்பட்டது. குறிப்பாக ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 29 ரன்கள் ரோஹித் சர்மா அடித்தார். நேற்று ஸ்டார்க் என்ன மாதிரியான தவறுகள் செய்தார் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் பேசியிருக்கிறார்.
உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க் தற்காலத்தில் முக்கியமானவராக இருக்கிறார். ஆனால் நேற்று அவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சாதாரண பந்துவீச்சாளர் போல அடித்து நொறுக்கினார். அவருடைய ஒரே ஓவரில் மட்டும் 29 ரன்கள் வந்தது.
மிட்சல் ஸ்டார்க் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஓவரில் தந்த மிக அதிகபட்ச ரன் இதுதான். மேலும் ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவர் தந்த எளிய கேட்ச் வாய்ப்பை கேப்டன் மிட்சல் மார்ஸ் தவற விட்டார். இந்த இரண்டு விஷயங்களும் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன.
இது குறித்து பேசி இருக்கும் பிராட் ஹாக் கூறும்பொழுது “ஆஸ்திரேலியாவில் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன். பந்து ஸ்விங் ஆகவில்லை. ஸ்டார்க் சரியான லென்த்தை பிடிக்கவில்லை. நேற்று ரோகித் சர்மாவுக்கு எதிராக ஸ்டார்க் இந்த தவறுகளைத்தான் செய்தார். இதுதான் அவரிடம் இருந்த கவலைக்குரிய விஷயம்.
ரோகித் சர்மா விக்கெட் விட்டு வெளியேறி தைரியமாக விளையாடிய ஒரு தருணம் இருந்தது. அப்பொழுது ஸ்டார்க் ரோகித் சர்மா காற்றை பயன்படுத்தி அடிக்கிறார் என்று சொன்னாரா? இல்லை பந்து ஸ்விங் ஆகவில்லை என்று சொன்னாரா? என்று தெரியவில்லை. அப்போது ஆஸ்திரேலியா நிறைய சிக்கலில் இருப்பதாக நினைத்தேன்
இதையும் படிங்க : ரோகித் சர்மாவே சொல்லிட்டார்.. 2011ல அந்த வீரர் செஞ்சத ஹர்திக் பாண்டியா செய்ய போறார் – ஸ்ரீசாந்த் பேச்சு
ஆஸ்திரேலியா இனி இதிலிருந்து திரும்ப வரப்போவது கிடையாது. அவர்கள் தீர்வுகளை தேடாமல் எங்கு தப்பு நடந்தது என்று தேடிக் கொண்டிருந்தார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா ஆரம்பத்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்ஸ் தவறவிட்டார். போட்டியில் இரண்டு ஓவர்கள் மீதும் இருந்தும் பொழுது அந்த வாய்ப்பை தவறவிட்டது பெரிய பிரச்சினையாகிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.