ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது தனக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக கிறிஸ் கெயில் கூறியிருக்கிறார்.
கிறிஸ் கெயில் தன்னுடைய ஐபிஎல் கடைசிக் கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு சில போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றார். அந்த நேரத்தில் அணி நிர்வாகம் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாகவும், அணியை விட்டு வெளியேறி சென்றுவிட முயன்றதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அவமரியாதை செய்யப்பட்டேன்
இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறும் பொழுது “என்னுடைய ஐபிஎல் வாழ்க்கை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் முன்கூட்டியே முடிந்து விட்டது. உண்மையை சொல்வது என்றால் நான் அந்த அணியில் அவமரியாதை செய்யப்பட்டேன். இந்த லீக்கில் எவ்வளவோ செய்து, உரிமையாளர்களுக்கு மதிப்பு கொடுத்த ஒரு மூத்த வீரராக என்னை அவர்கள் சரியாக நடத்தவில்லை என்று உணர்ந்தேன். மாறாக அவர்கள் என்னை ஒரு குழந்தை போல் நடத்தினார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக மன அழுத்தத்தில் நான் விழுந்தது போல உணர்ந்தேன்”
“பணத்தைவிட உங்களுக்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அப்போது தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு போன் செய்து நான் வெளியேறுவதாக கூறினேன். மேலும் அந்த நேரத்தில் நான் உலககோப்பை அணியில் இருந்தேன். அது மனரீதியாக என்னை அழித்துக் கொண்டிருந்தது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு நான் இங்கு இருந்தால் மேலும் என்னை அழித்துக் கொள்வேன் என்று முடிவு செய்தேன்”
கேஎல் ராகுல் தடுத்தார்
“நான் கும்ப்ளே உடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். ஏனென்றால் எனக்கு மனது மிகவும் புண்பட்டிருந்தது. நான் அவர் மீதும் அவர் அணியை நடத்திய விதம் ஏதும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் கேஎல் ராகுல் தான் என்னை அடுத்த ஆட்டத்தில் விளையாட வைப்பதாக கூறி அணியில் இருக்க சொல்லி தடுத்தார். ஆனால் நான் கேப்டன் ஆன அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு மூட்டையை கட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டேன்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பைக்கு செலெக்ட் பண்ணாதது வெறுப்பா இருக்கு.. என் கையில இருக்கிறது இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு
“நான் அந்த அணி நிர்வாகத்தால் தவறாக நடத்தப்பட்டு விட்டேன். ஆனால் அவர்கள் என்னை விரும்பி மீண்டும் அழைத்தால் நான் வருவேன். எனக்கு வெறுப்பு இருப்பது உண்மைதான். அதே சமயத்தில் எனக்கு விசுவாசமும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






