இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை வீரராக திகழ்ந்த அஜ்ங்கியா ரகானே இந்திய அணிக்காக கடந்த 2023ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களம் இறங்கி விளையாடினார்.
அதற்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் ரகானே, கடந்த 2021 ஆம் ஆண்டு கேப்டனாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார். ஒரு டெஸ்ட் கேப்டனாக தன்னை ஏற்கனவே நிரூபித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டுகள் தனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதன் காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி வீரர்கள் சிறப்பாக விளையாடாத போதும் ரகானே முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களின் நிலையற்ற செயல்பாட்டால் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய போதும் அதற்குப் பிறகு தனக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து ரகானே வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடினேன். ஆனால் அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் கிடைக்காததால், இந்திய அணியில் இருந்து வெளியேறினேன். இது எப்படி இருந்தாலும் என்னை தேர்வு செய்வது தேர்வு செய்யாமல் போவது அனைத்துமே தேர்வாளர்களின் கைகளில் உள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:பொய் சொல்லி துபாய்க்கு பறந்த இலங்கை வீரர்.. சிக்கலில் மாட்டிய தசுன் சனகா.. ஒரே நாள்.. இரண்டு நாட்டு கிரிக்கெட்
நான் அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது உங்களுக்குமே தெரியும்” என்று பிசிசிஐக்கு ரகானே கூறி இருக்கிறார். ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி கால் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வரும் ரகானே கால் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த டெஸ்ட் வீரர்களாக கருதப்படும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இருந்து முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.






