விராட் கோலி கிளம்புகிறாரா? பழகியவர் முறையில் சொல்கிறேன் இதுதான் நடக்கப்போகிறது! – கிரிஸ் கெயில் கருத்து!

0
2124

விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை தொடரா? என்னும் கேள்விக்கு பதில் கூறியுள்ளார் கிரிஸ் கெயில்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகளுக்கான அட்டவணையும் அண்மையில் மும்பையில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

வெளியிடப்பட்ட அட்டவணையில் குறிப்பிடத்தக்கவிதமாக இருப்பது மொத்தம் பத்து அணிகள் போட்டி நடக்கின்றன. 10 வித்தியாசமான மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி கடந்த பத்து வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கிறது. இம்முறை போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

இதற்கிடையே இந்திய வீரர்கள் சிலர் காயம் காரணமாக வெளியில் இருக்கின்றனர். சிகிச்சைகளும் பெற்று வருகின்றனர். இது அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. மேலும் கேப்டன் ரோகித் சர்மாவின் சமீபத்திய ஃபார்ம் சற்று கவலைக்குரியதாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்து வந்த விராட் கோலி கடந்த ஆசியகோப்பைக்கு பிறகு மீண்டும் ஃபார்மிற்கு வந்திருக்கிறார். தொடர்ச்சியாக கிடைக்கும் தொடர்களில் எல்லாம் சதங்கள், அரைசதங்களாக விளாசி அசத்தி வருகிறார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலககோப்பை தொடர். 2011இல் சச்சினுக்காக உலகக்கோப்பையை வென்றது போல், விராட் கோலிக்காக இந்த உலகக்கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்று சமீபத்திய பேட்டியில் வீரேந்திர சேவாக் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து பேட்டியளித்த கிறிஸ் கெயில், விராட் கோலிக்கு இது கடைசி உலகக்கோப்பை இல்லை. கண்டிப்பாக அடுத்த உலக கோப்பையை விளையாடுவார் என பேட்டியில் பேசியுள்ளார். “விராட் கோலி உடல்நிலை குறித்து நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அணியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் ஃபிட்டான வீரர் அவர். இந்த உலகக்கோப்பை அவருக்கு கண்டிப்பாக கடைசியாக இருக்காது.

விராட் கோலிக்கு 35 வயது தான் ஆகிறது அவருக்கு. அடுத்த உலகக்கோப்பையிலும் அவரால் விளையாட முடியும். மீண்டும் ஃபார்மிற்கு வந்திருக்கிறார். அவரைப் போன்ற வீரருக்கு ஃபார்ம் என்பது தற்காலிகமானது. தலைசிறந்த வீரர் அவர். கோலி அணியில் இருப்பதே தனி பலத்தை கொடுக்கும். என்னால் உறுதியாக சொல்ல முடியும் விராட் கோலிக்கு இது கடைசி உலக கோப்பை இல்லை என்று. இதே ஃபார்மை தொடர்ந்து எடுத்துச்சென்று அடுத்து உலக கோப்பையிலும் விளையாடுவார்.” என தெரிவித்தார்.