இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்துவரும் இளம் வீரர் ஜெய்ஷ்வால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ஆனால் அதற்குப் பிறகு அவரது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை.
இந்த சூழ்நிலையில் இந்திய டெஸ்ட் வீரரான சேட்டேஸ்வர் புஜாரா ஜெய்ஸ்வால் விளையாடும் விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
டெஸ்ட் அணியில் தனக்கென ஒரு பாணியை பிடித்து அதிரடியாக விளையாடி வரும் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விரைவாக வெளியேறினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் சூழ்நிலையை கணித்து அபாரமாக விளையாடி 161 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். முதல் போட்டி சரியாக விளையாடிய நிலையில் அதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் அவருக்கு சரியாக அமையவில்லை.
டெஸ்ட் பாணியில் விளையாடாமல் அவசரமாக ரன்களுக்குச் சென்று தனது விக்கட்டை தாரை வார்த்து வருகிறார். மேலும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் சமநிலையில் இருக்கும் நிலையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவரது தொடக்கம் இந்திய அணிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான புஜாரா சேவாக் விளையாடும் விதம் குறித்து ஜெய்ஸ்வாலுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அவர் தனக்கு இன்னும் நேரம் கொடுத்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் விளையாடும் விதத்தைப் பார்த்தால் விஷயங்களை அவசரப்படுத்த முயற்சிக்கிறார். அவர் கொஞ்சம் அதிக ஷாட்களை விளையாட விரும்புகிறார். அவர் விளையாடும் ஷாட்டில் உறுதியாக இருந்தால் மட்டுமே அத்தகைய முடிவை எடுக்க வேண்டும். குறிப்பாக அவர் முதல் 5 முதல் 10 ஓவர்களில் ரன்கள் எடுக்க முயற்சிக்கிறார். அவர் விரைவான தொடக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறார். மேலும் 15 முதல் 20 ரன்கள் வரை அவசரமாக எடுக்க விரும்புகிறார்.
இதையும் படிங்க:ஹெட் விரித்த வலையில் கில் சிக்கிவிட்டார்.. அதிலிருந்து தப்பிக்க அவர் இதை செய்யணும் – தினேஷ் கார்த்திக் பேச்சு
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது பந்துகளை அவசரமாக வெளியே சென்று விளையாட கூடாது. பந்துவீச்சுகளை திறமையின் அடிப்படையிலேயே கணித்து விளையாடுவீர்கள். நீங்கள் ஆக்ரோஷமான வீரராக இருந்தாலும் அது போல முயற்சிக்கக் கூடாது. சேவாக் கூட ஆக்ரோஷமான வீரர் தான் ஆனால் அவரது ஏரியாவில் பந்துகள் இருந்தால் மட்டுமே அடித்து ஆடுவார். அவசரப்பட்டு தனது விக்கட்டை பறிகொடுக்க மாட்டார்” என்று அவர் கூறியிருக்கிறார்.