நீங்க அனுப்புறதுக்கு முன்னாடி நானே கெளம்புறேன்.. தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து சேத்தன் சர்மா ராஜினாமா!

0
87

தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை பிசிசிஐக்கு கொடுத்திருக்கிறார் சேத்தன் சர்மா. பிசிசிஐ அதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வந்திருக்கிறது.

கடந்தமுறை தேர்வுக்குழு தலைவராக இருந்துவந்த சேத்தன் சர்மா, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

புதிய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மீண்டும் ஒருமுறை சேத்தன் சர்மா விண்ணப்பம் கொடுத்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.

பின்னர் விண்ணப்பங்களை பரிசோதித்து தகுதி அடிப்படையில் இரண்டாவது முறையாக தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டார். ஜனவரி மாதம் முதல் வாரம் அந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஜீ நியூஸ் நிறுவனம் சேத்தன் சர்மாவிடம் ரகசிய ஆப்ரேஷன் நடத்தியது. அப்போது ரகசிய கேமரா வைத்து பல்வேறு இவரிடம் கேள்விகளை எழுப்பி அதை ரெக்கார்ட் செய்தது.

பிசிசிஐ மற்றும் இந்திய அணி இரு தரப்பிற்கும் இடையேயான பல்வேறு தகவல்களை இவர் கூறியது கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதனை ஜி நியூஸ் நிறுவனம் பொதுவெளியிலும் வெளியிட்டு விட்டது.

இந்த சர்ச்சை கடந்த மூன்று நாட்களாக நிலவிவரும் நிலையில் சேத்தன் சர்மா இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ அவகாசம் கொடுத்திருந்தது. பிப்ரவரி 17ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜே ஷாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனை ஜே ஷா ஏற்றுக்கொண்டார் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது.

விரைவில் புதிய தேர்வுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பி சி சி ஐ தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கிறது.