2022 ஐபிஎலில் இவரது விக்கெட்டை கைப்பற்ற விரும்புகிறேன் – இளம் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா

0
43
Chetan Sakariya

2018 ஆம் ஆண்டு முதல் சௌராஷ்டிரா அணியில் இருந்து டொமெஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேட்டன் சக்காரியா. மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவரை கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு அவரை கைப்பற்றியது. கடந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிக சிறப்பாக விளையாடினார். 14 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு சில போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடியதை கண்ட பிசிசிஐ சர்வதேச அளவில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை கொடுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த ஆண்டு டெல்லி அணியில் களம் இறங்கப் போகும் சேட்டன் சக்காரியா

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி அவரை சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் டெல்லி அணி 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கைப்பற்றியது. இதனையடுத்து இந்த ஆண்டு டெல்லி அணியில் களமிறங்கி விளையாட சேட்டன் சக்காரியா தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவரிடம் நடந்த ஒரு உரையாடலில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சம்பந்தமாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை கைப்பற்றிய தருணம் என்னால் மறக்க முடியாது. கடந்த ஆண்டு எனது சிறப்பான தருணங்களில் அது மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஏபி டிவில்லியர்ஸ்சுக்கு பயிற்சித் தளத்தில் நெட் பவுலராக பந்து வீசி இருக்கிறேன். அவருக்கு பந்து வீசுவதென்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். அவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு இனி பந்து வீச முடியாது. அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய போது என்னுடைய ஆசை. எனவே இனிவரும் நாட்களில் நான் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்ற முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -