என்னுடைய டிராகன் பால் கொண்டாட்டத்திற்கு பின்னால் இருக்கும் உணர்ச்சி மிக்க காரணம் இதுதான் – சேத்தன் சக்காரியா

0
90
Chetan Sakariya dragon balla celebration

கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 1.2 கோடிக்கு வாங்கப்பட்ட சேத்தன் சக்காரியா, அந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் ஆடும் வாய்ப்பைப் பெற்று, தனது ஸ்விங் மற்றும் சமயோசிதமான மெதுவான பந்துகள், கட்டர்கள் மூலம் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் இந்திய அணி ரவிசாஸ்திரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்திற்கு டெஸ்ட் விளையாட சென்று இருக்க, இங்கு ராகுல் டிராவிட் பயிற்சியின் தலைமையின் கீழ் இலங்கை சென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்துச் சாதித்தார்.

- Advertisement -

இந்த வருடம் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் 4.2 கோடிக்கு டெல்லியால் வாங்கப்பட்ட இவர் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் வருத்தம் அடையும் சூழலே ஏற்பட்டது. இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் இவருக்கு மொத்தம் மூன்று ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. இதில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஆரோன் பின்ஞ்சின் விக்கெட்டை வீழ்த்திய பொழுது, வித்தியாசமான வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

தற்பொழுது இதைப்பற்றி சேத்தன் சக்காரியா கூறும்பொழுது “அது பிரபலமான அனிமேசன் தொடர் “டிராகன் பால் இஸட்”டில் வரும் கதாபாத்திரம் செய்வது. தொடர்ச்சியாய் வாய்ப்புகள் கிடைக்காமல் நான் மனதளவில் சோர்வடைய ஆரம்பித்திருந்தேன். அப்பொழுது கொல்கத்தா அணிக்கு எதிராக வாய்ப்பு கிடைத்தது. எனது தந்தை நான் சர்வதேச வீரரின் விக்கெட்டை வீழ்த்தினால்தான் என்னை ஒரு பந்துவீச்சாளராக ஏற்பதாக கூறுவார். அதனால் ஆரோன் பின்ஞ்சின் விக்கெட்டை வீழ்த்தியதும், அவரிடம் போய் இந்த தகவலைச் சொல்லும் விதமாய், கற்பனையாய் எங்கு வேண்டுமானாலும் போகும் அந்த கேரக்டரின் செய்கையை என் தந்தைக்காகச் செய்தேன். அவரின் வேடிக்கையான பேச்சுகள் எனக்கு ஊக்கசக்தியா இருப்பவை” என்று கூறினார்.

தற்பொழுது செளராஷ்ட்ரா பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் விளையாடி வரும் இவர், கடந்த ஞாயிறு ஹலார் ஹீரோஸ் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மெய்டனோடு கைப்பற்றி அசத்தி இருந்தார். அவரிடம் இந்தத் தொடர் தொடர்பாகப் பேசிய பொழுது “செளராஷ்ட்ரா பிரிமியர் லீக் மூலம் நிறைய வீரர்கள் ஐ.பி.எல் தொடருக்குள் வருவார்கள். குறிப்பாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் வருவார்கள். இப்போது அவர்கள் எல்லாம் அன்டர் 19, அன்டர் 23யில் விளையாடி வருவதால் கூடிய விரைவில் வாய்ப்பு பெறுவார்கள்” என்றார்.

- Advertisement -