142 ரன்.. டிஎன்பிஎல்-ல் தடுமாறும் நடராஜன்.. பேட்டிங்கில் கைவிட்ட விஜய் சங்கர்.. சேப்பாக் அணியிடம் திருப்பூர் தோல்வி

0
1193
Natarajan

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் 2024 டிஎன்பிஎல் தொடரின் எட்டாவது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் நடராஜனின் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சேப்பாக்கம் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் நாராயணன் ஜெகதீசன் 26 பந்துகளில் 36 ரன்கள், பிரதோஷ் ரஞ்சன் பால் 46 பந்துகளில் 67 ரன்கள், சித்தார்த் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

சேப்பாக்கம் அணி பேட்டிங்கில் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. திருப்பூர் அணியின் தரப்பில் முகமது அலி 4 ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். அதே தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நான்கு ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி 37 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஐபிஎல் தொடரில் கலக்கிய அவரது பந்துவீச்சு டிஎன்பிஎல் தொடரில் இன்னும் பழைய அளவுக்கு வரவில்லை.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் அணிக்கு பாட்டில் நான்காவது இடத்தில் வந்த எஸ்.கணேஷ் அதிரடியாக 35 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக துஷார் ரகேஜா 22 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் திருப்பூர் அணியில் 20 ரன்களை தொடவில்லை.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் பந்துவீச்சில் கணேசன் பெரியசாமி நான்கு ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20I வரலாறு.. இதுவரை கோலிக்கு மட்டுமே நடந்த சோகம்.. கில்லால் அபிஷேக் சர்மாவுக்கும் நடந்த பரிதாபம்

திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டனாக விஜய் சங்கர் இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் டி.நடராஜன் இருக்கிறார்.ஆனாலும் அந்த அணி இவர்களிடமிருந்து பெரிய பங்களிப்பு வராத காரணத்தினால் நடப்பு தொடரில் தொடர்ந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.