இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் நோக்கில் இரண்டு அணிகளும் அதற்கு தகுந்தவாறு திட்டங்களை தீட்டி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இந்தத் தொடர் குறித்துக் கூறிய அணில் கும்ப்ளேவின் கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர் தோட்டா கணேஷ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மா இடம் பெறுவது சந்தேகம்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஷ் டெஸ்ட் தொடரை போன்று தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடர் முக்கியத்துவம் பெறும் வகையில் அமைந்துள்ளது. கடந்த மூன்று முறையும் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பதால் இந்த முறை இந்திய அணியிடமிருந்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணி பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சில தனிப்பட்ட சூழ்நிலையின் காரணமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே கூறி இருந்தார். தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் இதற்கு முன்னர் டிராவிட் செய்து வந்ததை இப்போது கே எல் ராகுல் செய்து வருகிறார் என்று கூறியிருந்தார்.
அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்
ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடாமல் போனால் ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் தொடக்க ஆட்டக்காரராகவும் இந்திய அணிக்கு அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும் தொடரின் முதல் டெஸ்டிலேயே பெரும் வெற்றி என்பது ஒரு அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே இப்படி இருக்கும்போது கே.எல் ராகுல் இன்னிங்ஸ் தொடங்க வேண்டும் என்று அணில் கும்ப்ளே கூறி இருந்ததை இந்திய முன்னாள் வீரர் தோட்டா கணேஷ் மறுத்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் மிடில் வரிசையிலேயே அவர் விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:38 பந்தில் 85 ரன்.. யூசுப் பதான் போராட்டத்தில் சூப்பர் ஓவர்.. பைனலில் தினேஷ் கார்த்திக் அணி சாம்பியன் – லெஜெண்ட்ஸ் லீக் 2024
இது குறித்து அவர் கூறும் போது “நீங்கள் கே எல் ராகுலை மிடில் வரிசை பேட்ஸ்மேனாக ஒதுக்கி உள்ளீர்கள். எனவே அவரை அதே நிலையில் விட்டு விட வேண்டுமே தவிர வேறு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக செயல்படும் அபிமன்யு ஈஸ்வரன் டெஸ்ட் தொப்பியை பெற வேண்டும்” என்று தனது கருத்தை கூறியிருக்கிறார். உள்நாட்டு டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்துள்ள ஈஸ்வரன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.