நான் கேப்டன் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்ட மிகச் சிறந்த விஷயம் இதுதான் – சிமர்ஜித் சிங்

0
34
Simarjeet Singh and MS Dhoni

ஐ.பி.எல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குச் சென்னை அணிக்கு மோசமான சீசனாக இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் அமைந்திருக்கிறது. இதற்குப் பின்னால் பார்த்தால் சிலபல தற்செயல் நிகழ்வுகள் சேர்ந்து இந்தச் சரிவை உண்டாக்கி இருக்கின்றன.

இந்த முறை நடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பவர்-ப்ளே இந்திய ஸ்விங் பாஸ்ட் பவுலர் தீபக் சாஹரை 15 கோடிக்கு எடுத்தது சென்னை அணி. ஆனால் அவர் ஐ.பி.எல்-க்கு முன்னான வெஸ்ட் இன்டீஸ் தொடரில் காயமடைந்து, ஒருபோட்டியில் கூட ஆடாமல்ஷாவெளியேறினார்.

- Advertisement -

அவர் இல்லாத குறையை நியூசிலாந்தின் பாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவை வைத்துச் சரிகட்டலாம் என்றிருந்தபோது, ஆடம் மில்னே ஒரே ஆட்டத்தில் மட்டுமே விளையாடி காயமடைந்து தொடரிலிருந்தே வெளியேறினார். இவர்கள் இருவர் மட்டுமே பவர்ப்ளேவில் பந்துவீசக்கூடிய சர்வதேச ஆட்ட அனுபவங்கள் உள்ளவர்கள்.

நிலைமை இப்படி சென்னை அணிக்கு மோசமாக அமைய, இன்னொரு புறத்தில் ஐ.பி.எல் போட்டிகளின் 70 ஆட்டங்கள் நடைபெற்ற, மும்பை, நவிமும்பை, புனே மைதானங்களும் ஆடுகளங்களும், சூழல்களும் வேகத்திற்கும் ஸ்விங்கிற்கும் மிகச் சாதகமாக இருந்தது, சரியான ஸ்விங், பாஸ்ட் பவுலர்கள் இல்லாதது சென்னை அணியை மேலும் பலகீனமாக்கியது.

இந்த நிலையில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங் போன்றவர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குச் சென்னை அணி தள்ளப்பட்டது. இது ஒருவகையில் அடுத்த சீசனுக்கு சென்னை அணிக்கு நல்லதாய் மாறியிருக்கிறது. முகேஷ் செளத்ரி, சிமர்ஜித் சிங் இரண்டு இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சென்னை அணிக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதனால் அடுத்த சீசனில் தீபக் சாஹர் வந்தால் ஆடும் லெவனை எப்படி வேண்டுமென்றாலும் அமைக்க வசதியாய் இருக்கும்.

- Advertisement -

இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்ட டெல்லி அணி வீரர் சிமர்ஜித் சிங், இந்த ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அறிமுகமாகி ஆறு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகளை 7.76 எகானமியில் வீழ்த்தி இருக்கிறார். இவர் தற்போது தனது கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் பற்றிக் கூறும்பொழுது “நான் நெருக்கடியான அழுத்தம் மிகுந்த நேரங்களில் அமைதியாக இருப்பதை மஹி பாயிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்!