நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 62வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே சீசனில் டக் அவுட் ஆகி சோகமான சாதனையை படைத்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 62 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் டெல்லி மைதானத்தில் விளையாடி வருகின்றன. ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் ஆறுதல் வெற்றியைப் பெற இரண்டு அணிகளும் மோதுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஆடுகளத்தின் சூழ்நிலையை கணித்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனுபவ வீரர் டெவான் கான்வே மற்றும் ஆயுஸ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இதில் கான்வே அதிரடியாக இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கிய நிலையில் 10 ரன்கள் எடுத்து தனது 8வது பந்தில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்ததாக களம் இறங்கிய சிஎஸ்கே இளம் வீரர் உர்வில் பட்டேல் அவசரப்பட்டு இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் டக் அவுட் ஆனதன் மூலமாக சிஎஸ்கே இந்த சீசனில் அதிக முறை டக் அவுட்டான அணிகளில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 முறை டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இடத்தில் லக்னோ டெல்லி ராஜஸ்தான் சன்ரைசர்ஸ் வீரர்கள் 8 முறை டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்கள். இதில் குஜராத், பஞ்சாப், கொல்கத்தா 5 முறையும் பெங்களூர் 4 மற்றும் மும்பை 3 முறையும் இதை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தரமான வீரர்களை வாங்கனும்னா.. அந்த 38 வயது வீரரை சிஎஸ்கே அணியை விட்டு நீக்குங்க – ஆஸி டாம் மூடி பேட்டி
தற்போது விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்று முன்பு வரை 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடி 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ப்ரவீஸ் மற்றும் சிவம் தூபே தற்போது விளையாடி வருகிறார்கள்