சென்னை லக்னோ மும்பை பெங்களூரு பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வர என்னென்ன நடக்க வேண்டும்? முழு விபரம் உள்ளே!

0
534
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பான அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தை வென்றதின் மூலம் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது!

மேலும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பிருக்கின்ற சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் என்னென்ன மாதிரி ஆட்ட முடிவுகள் அமைந்தால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்? என்று இந்தத் தொகுப்பில் பார்ப்போம்!

- Advertisement -

சென்னை; தனது கடைசிப் போட்டியில் டெல்லி அணியுடன் விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும். இல்லையென்றால் லக்னோ, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் அணிகளின் போட்டி முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டும்!

லக்னோ ; 12 போட்டிகளில் 13 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. மீதி இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுடன் மோத இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளையும் வென்றால் நேரடியாகத் தகுதி பெறும். ஒன்றில் வென்றால் ரேஸில் உள்ள மற்ற அணிகளின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்.

மும்பை; 12 போட்டிகளில் 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. தனது கடைசி இரண்டு போட்டியில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் மோத இருக்கிறது. இரண்டையும் வென்றால் நேரடியாகத் தகுதி பெறும். இரண்டில் ஒன்றை வென்றால், லக்னோ, பஞ்சாப், பெங்களூரு, சென்னை அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

பெங்களூரு; 12 போட்டியில் 12 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. கடைசி இரண்டு போட்டியில் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுடன் மோத இருக்கிறது. இரண்டிலும் வென்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். ஒரு போட்டியில் மட்டும் வென்றால், மும்பை தனது இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும், அவர்களை விட ரன் ரேட்டில் பெங்களூரு மேலே இருக்க வேண்டும்.

பஞ்சாப்; 12 போட்டியில் 12 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுடன் கடைசி இரண்டு போட்டிகளில்விளையாட இருக்கிறது. இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ரன் ரேட் மைனஸில் இருப்பது பிரச்சனை. மேலும் ஒரு போட்டியில் வென்றால், ரன் ரேட் மைனஸில் இருப்பதால் கொஞ்சம் கடினம்.

ராஜஸ்தான்; 13 போட்டியில் 12 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. கடைசி போட்டியில் பஞ்சாப் அணியுடன் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வென்றால், ரேசில் உள்ள மற்ற அணிகள் 14 புள்ளிகளை இறுதியில் பெற வேண்டும். அப்பொழுது ராஜஸ்தானில் ரன் ரேட் அவர்களை விட அதிகமாக இருக்க வேண்டும்.