இதையும் செஞ்சிடுங்க.. ஆப்கான் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு புதிய சவாலை கொடுத்திருக்கும் பயிற்சியாளர்!

0
2288
Trott

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கக் கூடிய அணியாக ஆப்கானிஸ்தான் அணி மாறியிருக்கிறது. அந்த அணியின் ஒழுக்கமான கிரிக்கெட் செயல்பாடுகள் உலகக்கோப்பை தொடரை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய முதல் போட்டியில் 150 ரன்களுக்கு பங்களாதேஷ் அணியிடம் சுருண்டு படுதோல்வி அடைந்தது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது பெரிய பிரச்சனையானது.

- Advertisement -

முதல் கேள்விக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. அதுவும் அந்த வெற்றி கடினப்பட்டு வரவில்லை. ஆப்கானிஸ்தானின் பேட்ஸ்மேன் ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்து சரியாக விளையாடி ஒரு நாகரிகமான இலக்கிற்கு வந்தார்கள். பின்பு பந்துவீச்சில் மிக ஒழுக்கமாக செயல்பட்டு வெற்றி பெற்றார்கள்.

இதே வழிமுறையைத்தான் அடுத்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளும் காட்டினார்கள். ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதம் பழைய காலத்தில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது போல இருக்கிறது. அவர்கள் இலக்கை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது ஆச்சரியப்படுத்துகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியில் அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட்டுக்கு பெரிய பங்கு இருக்கிறது. இங்கிலாந்து முன்னாள் வீரரான இவருடைய திட்டங்களும், வீரர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கையும் தைரியமும் வெற்றியில் வெளிப்படுகிறது.

நேற்று இலங்கையை வீழ்த்திய பிறகு பேசி உள்ள ஜோனதன் டிராட் “இன்னும் எங்கள் அணியில் யாரும் சதம் அடிக்கவில்லை. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்ன்களுக்கு அடுத்த சவால் இதுதான். யாராவது ஒரு பேட்ஸ்மேன் பொறுப்பு எடுத்து நீண்ட நேரம் களத்தில் நின்று சதம் அடிக்க வேண்டும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் நிறைய அணிகளின் பேட்ஸ்மேன்கள் சதம் அடித்திருக்கிறார்கள். இந்த சவால் எங்களுக்கு அடுத்த எல்லையாகும். குர்பாஸ் மற்றும் இப்ராகிம் இருவரும் சதங்கள் அடித்திருக்கிறார்கள். மிடில் ஆர்டரிடம் இருந்து சதங்கள் வர வேண்டும்.

எனவே இதை அடுத்த சவாலாக கொண்டிருக்கிறோம். எங்கள் வீரர்கள் எதிர்காலத்தில் இதை செய்வார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இது அடுத்த ஆட்டத்தில் இருந்து தொடங்கும் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -