எப்பேர்ப்பட்ட அணியானாலும், “மொத்த கிரவுண்டும் எங்களுக்கு சப்போர்ட்.. இதுல 170+ சேஸ் பண்ணி எங்களை ஜெயிச்சிட முடியுமா என்ன? – தீபக் சஹர் பேட்டி!

0
5423

“மைதானத்தின் மொத்த ரசிகர்களும் எங்களுக்கு சப்போர்ட் மற்றும் செமி-பைனலில் 170 பிளஸ் ரன்களை சேஸ் செய்வதென்பது கடினம். இந்த நம்பிக்கையோடு இன்று களமிறங்கினோம்.” என பேட்டியில் வைத்துள்ளார் தீபக் சஹர்.

2023 ஐபிஎல் சீசன் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிபயர் போட்டியில் மோதின.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் அடித்தது. ருத்துராஜ் 60 ரன்கள், டெவான் கான்வெ 40 ரன்கள், கடைசியில் வந்து கேமியோ விளையாடிய ஜடேஜா 22 ரன்கள் என மூவரும் பேட்டிங்கில் அடித்துக்கொடுத்தனர்.

குஜராத் அணிக்கு ஓபனிங்கில் சகா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களுக்கும், சனக்கா 14 ரன்களுக்கும் அவுட்டாகினர்.

சுப்மன் கில் தனது பார்மை வெளிப்படுத்தி ரன்குவிக்க சிறப்பாக விளையாடி வந்தார். மிடில் ஆர்டரில் மில்லர் 4 ரன்கள் மற்றும் திவாட்டியா 3 ரன்கள் என சொற்பரன்களுக்கு மோசமாக ஆட்டமிழந்து வெளியேற, 98 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்து குஜராத் அணி தடுமாறியது.

- Advertisement -

முக்கியமான கட்டத்தில் கில்(42 ரன்கள்) விக்கெட்டை தூக்கினார் தீபக் சஹர். கடைசியில் வந்து சிக்ஸர் பவுண்டர்களாக விளாசிய ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 159 ரன்களுக்கு குஜராத் அணியை ஆல்அவுட் செய்த சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் பைனலுக்கும் முன்னேறியது.

பந்துவீச்சில் முக்கியமான 2 விக்கெட்டுகளை தூக்கிய தீபக் சஹர், போட்டி முடிந்த பின் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“இதுவரை நடந்தவை எல்லாம் ஓகே. இன்னும் ஒரு போட்டியில் நன்றாக செயல்பட வேண்டும். இன்று குஜராத் அணி பந்துவீசுகையில் நான் கவனித்தேன். பந்து நன்றாக நின்று வந்தது. ஆகையால் முடிந்தவரை ஃபுல் லென்ந்தில் பந்துவீச முற்பட்டேன். அதையும் மீறி ரிஸ்க் எடுத்து அடித்தால் அடிக்கட்டும். இந்த சூழலில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பரிசோதனையில் ஈடுபடக்கூடாது.

மைதானத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக இருக்கும்பொழுது, செமி பைனல் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில 170 பிளஸ் ரன்களை சேஸ் செய்வது மிகவும் கடினம்.

நான் ஏற்கனவே பிளே-ஆப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்றிருக்கிறேன் பிளே-ஆப் குறித்து ஜூனியர் வீரர்களிடம் நான் பேசியபோது, ‘உங்களுடைய திறமை மீது முழு நம்பிக்கையை வைத்து செயல்படுங்கள். அழுத்தம் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு பந்து மற்றும் ஒரு கேட்ச் ஆட்டத்தை மற்றும் மொத்தமாக மாற்றுவதற்கு போதுமானது.’ என்று அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.

ஏற்கனவே பிளே-ஆப் போட்டிகளில் வென்று பைனலுக்கு சென்றிருக்கிறோம். இம்முறையும் அதே நம்பிக்கையுடன் இருந்தோம். அணியில் மிகமிக சீனியர் வீரர்கள் இருப்பது இது போன்ற பெரிய போட்டிகளை கையாள்வதற்கு உதவிகரமாக இருக்கிறது. இதற்கு முன்னரும் அவர்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள். அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அவர்களது அனுபவம் மூலம் ஆட்டத்தை எங்கள் பக்கம்கொண்டு வருவார்கள். மீண்டும் ஒரு முறை அது நடந்திருக்கிறது.” என்றார்.