உலக டேஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிலை என்ன? பைனலுக்கு தகுதிபெற இன்னும் என்ன செய்ய வேண்டும்? – ரிப்போர்ட்!

0
11646

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பெற்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறது? இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இன்னும் என்னென்ன செய்ய வேண்டும்? என்கிற புள்ளி விவரங்களை பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இரண்டையும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணத்தில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 64.06 சதவீத வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 66.6 சதவீத வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்திலும் நீடிகிறது. மூன்றாவது இடத்தில் 53.33 சதவீத வெற்றிகளுடன் இருக்கும் இலங்கை அணிக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரண்டையும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால், ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கல் ஏற்படலாம்.

- Advertisement -

இலங்கையின் இத்தகைய வெற்றி இந்திய அணிக்கும் சிக்கலாக அமைந்து விடும். ஏனெனில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டையும் டிரா செய்தால் அல்லது ஏதேனும் ஒரு தோல்வி அல்லது ஒரு டிரா செய்ய வேண்டும். அதாவது குறைந்தபட்சம் 2-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றவேண்டும். அப்போது இந்திய அணி சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

ஆஸி., அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்டையும் தோல்வியடைந்தால் இந்திய அணிக்கு சிக்கலாக மாறிவிடும். எளிதாக ஆஸி., அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். அதேபோல் ஆஸ்திரேலியா அணி இரண்டையும் தோல்வியுற்று 0-4 என இந்தியாவிடம் தொடரை இழந்தால், அந்த அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதும் சிக்கலாகிவிடும்.

இவை அனைத்தும் இலங்கை அணியின் வெற்றி தோல்வியை பொறுத்து அமையும். ஒருவேளை இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை இழந்தால் கூட இந்தியா ஆஸ்திரேலியா இரு அணிகளும் எவ்வித சிக்கலும் இன்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.