அணியில் இடமில்லை என்று வருத்தம்.. சேத்தன் சகரியா இடத்தில் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டேக்கு வாய்ப்பு

0
837

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் துலிப் டிராபியுடன் துவங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 28ஆம் தேதி துவங்கிய போட்டிகளில் கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் ஆகிய அணிகளும் வடக்கு மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டலம் ஆகிய அணிகளும் மோதின .

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ஜூலை 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அரை இறுதி போட்டிகளில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகளை சந்திக்க இருக்கின்றன . இந்நிலையில் முதலாவது அரை இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்பாக மேற்கு மண்டல அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது .

- Advertisement -

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்கரியா தாயும் காரணமாக போட்டிகளில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது . ஐபிஎல் போட்டிகள் மற்றும் நடந்து முடிந்த ரஞ்சி டிராபி போட்டிகளில் தனது அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் சேத்தன் சக்கரியா .

இதனைத் தொடர்ந்து மும்பை அணியை சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே மேற்கு மண்டல அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளரும் இவர்தான் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து சேத்தன் சக்கரியா காயத்தால் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக துஷார் தேஷ் பாண்டே மத்திய மண்டல அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் . ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் மத்திய மண்டல அணி வடக்கு மண்டல அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது .