சாம்பியன்ஸ் டிராபி.. பட்டையை கிளப்பிய இந்திய அணியின் ரிசர்வ் வீரர்.. ரஞ்சி போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

0
35

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 15 வீரர்கள் மட்டுமே துபாய்க்கு செல்ல முடியும்.  காரணம், ஐசிசி தொடர் என்றால் வெறும் 15 வீரர்கள் மட்டும்தான் தொடரில் இடம் பெறுவார்கள்.

ஒருவேளை ஏதேனும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரிசர்வ் வீரர்களாக சிலர் அறிவிக்கப்படுவார்கள். அந்த வகையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களாக ஜெய்ஸ்வால், சிவம் துபே, முஹமது சிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

சிவம் துபே அபார பந்துவீச்சு:

இந்த சூழலில் மூன்று வீரர்களும் துபாய் செல்லாததால் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிச் சுற்றில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் மும்பை அணிக்காக விளையாடும் சிவம் துபே பந்துவீச்சில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணியும் விதர்பா அணியும் பல பரிட்சை நடத்தியது.

இதில் விதர்பா அணியில் தொடக்க வீரர் துருவ் சோரே 74 ரன்களும், தானிஷ் மலேவர் 79 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 45 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதில் யாஷ் ரத்தோட் 54 ரன்களும், கேப்டன் அக்ஷய் வதாகர் 34 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் விதர்பா அணி 383 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

ஆல் ரவுண்டர் என நிரூபித்தார்:

இதில் பந்துவீச்சில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சிவம் துபே 49 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆல் ரவுண்டரான கில், பந்துவீச்சில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு நிலவியது.

ஆனால் தற்போது சிவம் துபே ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் சிவம் துபே, இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு முக்கிய ஆல்ரவுண்டராக விளங்குகிறார்.

டி20 போட்டிகள் மட்டுமே சிவம் துபே விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தம்மால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதை ரஞ்சிப் போட்டியில் மூலம் அவர் நிரூபித்திருக்கிறார்.
சிவம் துபே இதுவரை இந்திய அணிக்காக நான்கு ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். அதில் இவர் மொத்தமாக 43 ரன்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -