சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி வரும் மார்ச் ஒன்பதாம் தேதி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் பல பரிட்சை நடத்துகிறது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்படும். தற்போது நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் டக்கட் 227 ரன்கள் அடித்திருக்கிறார்.
கோலிக்கு தங்க பேட் கிடைக்குமா?:
நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 226 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 225 ரன்கள் அடித்திருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி 217 ரன்கள் அடித்துள்ளார். இதில் முதலிடத்தில் இருந்த பென் டக்கட்டும் மூன்றாவது இடத்தில் உள்ள ஜோ ரூட்டும் தொடரை விட்டு ஏற்கனவே வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டியில் ரச்சின் ரவீந்திராவும் விராட் கோலி மட்டும் தான் விளையாடுகிறார்கள்.
இதனால் விராட் கோலி பைனலில் ரச்சின் ரவீந்திரா கூடுதலாக 10 ரன்கள் அடித்தால் அவருக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்படும். கடந்த 2013 ஆம் ஆண்டும் 2017 ஆம் ஆண்டும் இந்திய வீரர் ஷிகர் தவான் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடித்ததற்கான தங்க பேட் விருதை பரிசாக வென்றார்.
கெயில் சாதனையை முறியடிப்பாரா?:
இந்த சூழலில் மீண்டும் ஒரு இந்தியர் இந்த பரிசை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அது மட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கும் உத்வேகத்தில் விராட் கோலி இருக்கிறார். இதுவரை சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 17 இன்னிங்ஸில் 791 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: என்னை என்ன வேணா சொல்லுங்க.. ஆனால் என் பிளேயர்ஸ்க்கு ஏதாவதுனா சும்மா இருக்க மாட்டேன் – சிஎஸ்கே கேப்டன்
தற்போது இந்திய அணியின் விராட் கோலி 17 இன்னிங்ஸில் சாம்பியன் டிராபி தொடரில் 746 ரன்கள் அடித்துள்ளார். இதனால் இறுதிப்போட்டியில் விராட் கோலி 46 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற வாய்ப்பு இருக்கிறது. தற்போது விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். இதனால் பைனலில் விராட் கோலி ஒரு அரை சதமோ இல்லை சதமோ அடித்தால் அவருடைய ரெக்கார்ட் மேலும் உயரும்.






