கேப்டன்களின் டெஸ்ட் ! ரோஹித் சர்மா தான் பெஸ்ட் ! – இந்தப் போட்டியில் அவர் தனதாக்கிக் கொண்ட சாதனைகள்”!

0
657

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை எண் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது . நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் செய் ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது .

கேப்டன் ரோஹித் சர்மா அபாரமகா ஆடி அரை சதம் அடித்திருந்தார் . இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஒரு முனையில் ரோகித் சர்மா மற்றும் நிலைத்து நின்று இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார் . கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கி ரோஹித் சர்மா தனது கம்பேக் போட்டியில் அபாரமாக ஆடி சதம் அடித்தார் .

- Advertisement -

மேலும் இந்தப் போட்டியில் அவர் சதம் அடித்ததோடு இந்திய அணியின் பல சாதனைகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார் . இந்தப் போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகளுடன் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். இந்த டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த சிக்சரின் மூலம் இந்தியாவில் 250 ஆவது சிக்சரை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் . இந்தியாவில் 200 வது சிக்சரை அடித்த சாதனையும் அவரிடமே உள்ளன .

மேலும் இந்தியாவில் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் சாதனையை சமன் செய்து இருக்கிறார் ரோஹித் சர்மா . இந்தியாவில் அவர் 17 இன்னிங்ஸ்க்ளில் ஆயிரம் ரகளை கடந்து இருக்கிறார் . இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் நவ்ஜோத் சிங் சித்து 17 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரகளை கடந்தது இந்திய அளவில் சாதனையாக இருந்தது இந்த சாதனையை சமன் செய்திருக்கிறார் ரோஹித் .

துவக்க வீரராக களம் இறங்கி இந்திய அணிக்காக அதிக 50+ ஸ்கோர்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் ரோஹித் சர்மா . இந்தப் பட்டியலில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 120 50 பிளஸ் ஸ்கோர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார் . ரோகித் சர்மா 101 50 பிளஸ் ஸ்கோர்களுடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் வீரேந்திர சேவாக் உடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் ரோகித் சர்மா கேப்டனாக இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் .

- Advertisement -