“என் கேப்டன்சி தோனி பாய் ஸ்டைல்ல இருக்காது.. நான் தனியாதான் இருப்பேன்!” – ருதுராஜ் தைரியமான பேச்சு!

0
641
Ruturaj

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஒரு பக்கம் இந்தியாவில் நடைபெற இருக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்பான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பரபரப்பாக தயாராகி இருக்கிறது!

இந்த நிலையில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் இன்னொரு அணி சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதற்காக சீனா சென்று உள்ளது.

- Advertisement -

இந்த அணிக்கு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்களைக் கொண்டு ருதுராஜ் தலைமையில் லக்ஷ்மன் பயிற்சியில் சிறந்த ஒரு அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொடரில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி நாளை தன்னுடைய போட்டியில் விளையாடுகிறது. வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதியில் ஆறாம் தேதியும், இறுதிப் போட்டியில் ஏழாம் தேதியும் விளையாடும்.

இந்த நிலையில் இந்த தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ருதுராஜ் “நான் தோனி பாய் இடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அவருடைய பாணி வித்தியாசமானது. அவருடைய ஆளுமை வித்தியாசமானது. நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன். அவர் வழக்கமாக என்ன செய்வார்? என்பதை உண்மையில் பார்க்க மாட்டேன்.

- Advertisement -

வெளிப்படையாக அவர் செய்யக்கூடிய சில சிறப்பான விஷயங்களை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். அவர் போட்டியில் ஒரு சூழ்நிலை எப்படி கையாளுகிறார்? வீரர்களை எப்படி கையாளுகிறார்? இந்த மாதிரியான விஷயங்கள் உள்ளன. வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு முடிந்தவரை சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது இந்த வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு மற்றும் பெருமையான விஷயம். இந்த போட்டியை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை வென்றது போலவே நாங்களும் வெல்ல விரும்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!