சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருந்த பொழுதும், ருதுராஜுக்கு இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு தராதது குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் முதல் முறையாக யாதவ் பதிலளித்திருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நாளை டர்பன் நகரில் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் எதிர்கொண்டார்.
கில்லுக்கு முன்னுரிமை ருதுராஜ் புறக்கணிப்பு
இந்திய டி20 அணியில் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதோடு அவரை துணை கேப்டன் ஆகவும் அறிவித்தார்கள். இன்னொரு துவக்க வீரருக்கான இடத்தில் போட்டியின்றி ஜெய்ஷ்வால் இடம் பெற்றார். எனவே எதிர்காலத்தில் கூட இந்திய டி20 அணியில் ருதுராஜுக்கு இடம் இல்லை என்பதாகவே தெரிந்தது.
இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத பொழுதும் கூட ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் அவருக்கு பின்பு இந்திய டி20 அணிக்கு சமீபத்தில் வந்த அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
கேப்டன் சூரியகுமார் யாதவ் பதில்
மேலும் கம்பீர் தன்னுடைய விருப்பத்திற்குரிய வீரரான சஞ்சு சாம்சனை திடீரென துவக்க ஆட்டக்காரர் ஆகவும் மாற்றினார். அவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சதம் அடித்தார். இதனால் ருதுராஜுக்கான கதவுகள் முற்றாக சாத்தப்பட்டது போல் தெரிகிறது.
இந்த நிலையில் இது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் “ருதுராஜ் ஒரு அற்புதமான வீரர். அவர் தனக்கு வாய்ப்பு கிடைத்த எல்லா வடிவத்திலும் மிகச் சிறப்பாக எல்லா இடங்களிலும் விளையாடி வந்திருக்கிறார். அவருக்கு முன்னால் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக அணி நிர்வாகம் ஒரு வழக்கத்தை வைத்திருப்பதாக நினைக்கிறேன். எனவே இதைப் பின்பற்றுவது முக்கியம்”
இதையும் படிங்க : இந்திய அணியுடன் இந்தப் பிரச்சனை இல்லை.. இப்போ எங்க திட்டமே வேற – தென் ஆப்பிரிக்கா டி20 கேப்டன் பேட்டி
“எனவே இதன் காரணமாகவே அவருக்கு நன்றாக விளையாடிய பொழுதிலும் கூட இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று தோன்றுகிறது. அவர் இன்னும் இளமையானவராக இருக்கிறார். எனவே அவருக்கான நேரம் நிச்சயம் வரும்” என்று கூறியிருக்கிறார்.