இன்னைக்கு தோத்தாலும் அபிஷேக் அதை மட்டும் மாத்திக்க கூடாது.. மீதி மீங்க இத செஞ்சா ஜெயிக்கலாம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
178
Abhishek

இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இன்று மெல்போன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

அபிஷேக் தனி ஆவர்த்தனம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி துணை கேப்டன் கில் 5, சஞ்சு சாம்சன் 2, கேப்டன் சூரியகுமார் யாதவ் 1, திலக் வர்மா 0 என பவர் பிளேவில் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதைத்தொடர்ந்து வந்த அக்சர் படேல் 12 பந்தில் 7 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.

இந்த நிலையில் ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா ஆச்சரியப்படுத்தும் விதமாக அரை சதம் அடித்து 37 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் எடுத்தார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹர்ஷித் ராணா 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 13.2 ஓவரில் இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அபிஷேக் மாறக்கூடாது

இந்த போட்டியில் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் “ஹேசில்வுட் பந்து வீசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பவர் பிளேவில் நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானது. இதற்கான முழு பெருமையும் அவருக்கே சேரும். அவர் மிகவும் சிறப்பான முறையில் பந்து வீசினார்”

“அபிஷேக் ஷர்மா சிறிது காலமாக அணிக்கு இத்தகைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். அவர் தன்னுடைய அடையாளம் என்ன என்று நன்றாக அறிவார். அவர் அதை மாற்றிக் கொள்ளக் கூடாது. அதுதான் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. எனவே இதே அதிரடி முறையை பின்பற்றி அவர் நமது அணிக்கு இன்னும் நிறைய வெற்றிகள் கொண்டு வருவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க : கடைசி கட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு..  ஹாட்ரிக் வாய்ப்பை நோக்கி சென்ற பும்ரா.. 2வது டி20 யில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலியா

“முதல் ஆட்டத்தில் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங் செய்தோம். நாங்கள் அடுத்து வரும் பொழுது அதே மாதிரி சிறப்பான முறையில் பேட்டிங் செய்ய வேண்டும். முதலில் பேட்டிங் செய்ய வேண்டி இருந்தால் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். இதற்கு அடுத்து திரும்பி வந்து டைட்டான லைன் அண்ட் லென்த்தில் வந்து வீச வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -