ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தாலும் எடுக்கப்பட்ட ரன்கள் மிகவும் குறைவு என்பதால், இந்தியா தோல்வியை தழுவியது.
மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 5 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும் சூரிய குமார் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா டக்அவுட் ஆக, அக்சர் பட்டேல் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அபிசேக் அபாரம்:
இதன் மூலம் இந்திய அணி 49 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது அபிஷேக் சர்மா மற்றும் ஹர்ஷித் ரானா ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க ஹர்ஷித்ரானா 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
கீழ் வரிசை வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடறது தான் இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்கள் அனைத்து விக்கெட்டுகள் இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹேசல்வுட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
ஹாட்ரிக் மிஸ்:
தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 28 ரன்கள் ஆட்டம் இழக்க, கேப்டன் மார்ஷ் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதுபோன்று ஜோஸ் இங்கிலீஷ் 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நடு வரிசையில் டிம் டேவிட் 1 ரன்னிலும், மிட்செக் ஓவன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவை என இருந்தபோது பும்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பை உருவாக்கினார். எனினும் அவரால் ஹாட்ரிக் சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இதையும் படிங்க: 37 பந்துகளில் 68 ரன்கள்.. தனி ஆளாக மிரட்டிய அபிசேக் சர்மா.. மற்ற இந்திய வீரர்கள் ஏமாற்றம்.. ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 13.2 அவர்களின் 6 விக்கெட் இழந்து வெற்றியை எட்டியது. இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா வருண் சக்கரவர்த்தி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது.






