இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி இன்று குயின்ஸ்லேண்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணியே தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரராக சாதனை
இந்திய டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 29 போட்டிகளில் 27 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் எடுத்து, குறைந்த டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு ஆயிரம் ரன்கள் எடுத்த வீரராக இருக்கிறார். அதே சமயத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலான் 24 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா தற்பொழுது 27 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் விளையாடி 961 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்றைய போட்டியில் மேற்கொண்டு அவர் 39 ரன்கள் எடுத்தால் குறைந்த போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஆயிரம் ரன்கள் எடுத்த வீரராக விராட் கோலி சாதனையை முறியடிப்பா டீம் டேவிட்ர்.
காத்திருக்கும் உலக சாதனை
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் முதல் ஆயிரம் ரன்கள் எடுத்த வீரராக கடந்த போட்டியில் டிம் டேவிட் உலக சாதனை படைத்திருந்தார். அவர் ஆயிரம் ரன்கள் எடுப்பதற்கு மொத்தம் 569 பந்துகள் தேவையாக இருந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சூரிய குமாருக்கு 573 பந்துகள், நியூசிலாந்தின் பின் ஆலனுக்கு 611 பந்துகள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க : அந்த 2 பேர் இந்திய டீம்ல இருந்திருந்தா.. நாங்க இப்போ ODI தொடர் ஜெயித்து இருக்க முடியாது – மைக்கேல் கிளார்க் பேட்டி
இந்த நிலையில் தற்போது அபிஷேக் ஷர்மா மொத்தமாக 500 பந்துகள் எதிர்கொண்டு 961 ரன்கள் எடுத்திருக்கிறார். டிம் டேவிட் உலக சாதனையை முறியடிப்பதற்கு அவருக்கு 68 பந்துகள் கைவசம் இருக்கிறது. மேலும் 39 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் 39 ரன்கள் அபிஷேக் ஷர்மா எடுத்தாலே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் ஆயிரம் ரன் அடித்த வீரராக டிம் டேவிட் சாதனையை முறியடித்து விடுவார்.






