ஐபிஎல் 2025

கில்லுக்கு டி20 அணியின் துணை கேப்டன் பதவி ஏன்? இது நியாயமா? – கேப்டன் சூரியகுமார் தந்த விளக்கம்

தற்போது இந்திய t20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தரப்பட்டது மட்டும் இல்லாமல் துணை கேப்டன் பொறுப்பு ஏன் தரப்பட்டது? என்பது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இன்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் கில்லுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்ட தோடு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடுமையான விமர்சனங்கள்

இந்திய டி20 அணியில் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் அதேவேளையில் அவரைவிட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த புள்ளி விபரங்களை வைத்திருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அகர்கர், கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இதற்கான விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

முன்பே இருந்ததுதான்

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “கடைசியாக கில் சர்வதேச டி20 கிரிக்கெட் விளையாடியது என்னுடைய தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில்தான். அப்போது அவர் துணை கேப்டன் ஆகவும் இருந்தார். நாங்கள் டி20 உலகக் கோப்பை முதல் சுழற்சியை அங்கிருந்துதான் ஆரம்பித்தோம். பிறகு டெஸ்ட் தொடர்களில் பிஸி ஆகிவிட்டார். மேலும் அவர் அடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட சென்று விட்டதால் டி20 தொடர்களில் விளையாட முடியவில்லை. பிறகு அவர் மீண்டும் வந்ததும் அவருடைய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது”

இதையும் படிங்க : 296 ரன்.. கேசவ் மகாராஜ் செய்த அடுத்தடுத்த 5 மேஜிக்.. கொத்தாக விழுந்த ஆஸி.. தென் ஆப்பிரிக்கா வெற்றி

“தற்போது கில் அணியில் இருக்கிறார். நாங்கள் அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். டி20 உலகக் கோப்பைக்கு பிறகு நாங்கள் விளையாடும் பெரிய தொடர் இதுவாகும். அடுத்து டி20 உலகக் கோப்பை விளையாடுவதற்கு முன்பாக நமக்கு நிறைய டி20 போட்டிகள் இருக்கின்றன. அதற்கான பயணம் இங்கிருந்து துவங்குகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts