இந்திய கிரிக்கெட்

எங்க டீம்க்கு இன்ஜின் இல்லாம இருக்கு .. ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த ரோல்தான் கொடுத்திருக்கோம் – சூரியகுமார் பேட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார்.தற்போது இந்திய அணியில் அவருக்கு என்ன ரோல் கொடுக்கப்படும் என கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் தற்போது மூன்று போட்டிகள் கொண்டாட்டம் டி20 தொடரின் முதல் போட்டியில் இன்று இந்திய அணி விளையாட இருக்கிறது.

மேலும் இந்திய டி20 அணியின் கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா இந்த டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடுகிறார். மேலும் அடுத்த நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு வாங்கி வெளியேறுகிறார். எனவே ஹர்திக் பாண்டியாவை தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் விளையாட வைப்பார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய டி20 அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் என்ன மாதிரி ரோல் கொடுக்கப்படும் என்பது குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார். மேலும் தற்போது இந்திய அணி எவ்வாறு அமைக்கப்படும் என்பது குறித்தும் சூரியகுமார் யாதவ் விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “ஹர்திக் பாண்டியாவின் பங்கு என்பது எப்பொழுதும் பழைய மாதிரிதான் இருக்கும். அவர் அணியின் மிக முக்கியமான வீரர். டி20 உலகக் கோப்பையில் அவர் எப்படி செயல்பட்டாரோ அப்படியே தொடர்ந்து செயல்படுவார் என்று நம்புகிறேன். அதே ரயில்தான் இன்ஜின் மட்டும் மாறிவிட்டது. பெட்டிகள் மாறாமல்தான் இருக்கின்றன.

இதையும் படிங்க : சூர்யா நீங்க புத்திசாலி.. ஆனா இந்த ஒரு விஷயத்தை மட்டும் கத்துக்கோங்க – ரவி சாஸ்திரி அட்வைஸ்

நான் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் அவர் காலத்திற்கு உள்ளே மட்டும் இல்லாமல் வெளியேயும் தலைவராக இருந்தார். மேலும் ரோகித் சர்மா கேப்டன் கிடையாது அவர் லீடர். இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. டி20கிரிக்கெட் விளையாடுவது எப்படி? வெற்றி பெறுவது எப்படி? என்று நான் அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by